தென் ஆப்பிரிக்காவில் ஆசிரியை ஒருவர் ஆபாச உடையுடன் நடனமாடிய செக்ஸ் பார்ட்டி காணொளி மாணவ-மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் டேவைதான் என்னும் பகுதியில் யுனிட்டி மேல் நிலைப்பள்ளி என்ற பள்ளி ஒன்று உள்ளது.
இங்கு மாணவ- மாணவிகளுக்கு அமர நாற்காலி பற்றாக்குறை இருந்ததால் அதுகுறித்து புகார் செய்ய அவர்கள் சென்றுள்ளனர்.
அப்போது தான் ஆசிரியை ஒருவர் இந்த நாற்காலிகளை தனது வீட்டிற்கு எடுத்து சென்று சக ஆசிரியர்களுடன் செக்ஸ் பார்ட்டி நடத்துவது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவர் ஆரைகுரை ஆடையுடன் பள்ளி தோட்டக்காரனுடன் ஆபாச நடனம் ஆடும் காணொளியை பார்த்த மாணவர்கள் திகைத்து போயுள்ளனர்.
இதுகுறித்து மாணவன் ஒருவன் கூறுகையில், ஆசிரியையின் செயல் பற்றி கவலையில்லை. ஆனால் எங்களின் தேர்வு நேரத்தில் இவ்வாறு நாற்காலிகளை எடுத்து செல்வதும், பள்ளி சொத்துகளை தவறாக பயன்படுத்துவதும் தான் மனம் நோகச் செய்கிறது என தெரிவித்துள்ளான்.
மேலும் இதுபோல் முட்டாள்த்தனமான நிகழ்ச்சியை படம்பிடித்த இந்த ஆசிரியை, இனி எவ்வாறு எங்கள் முகத்தில் விழிப்பார் என்றும் அவர் மீது எப்படி மரியாதை வரும் எனவும் மாணவி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.