Home சமையல் குறிப்புகள் அவல் வற்றல்

அவல் வற்றல்

25

அவல் எல்லோருக்கும் பிடித்தமான உணவு. அதில் வற்றல் தயாரிக்க தேவையான பொருட்கள் வருமாறு:-

அவல்- அரை கிலோ,
பெருங்காயம்- சிறிதளவு,
பச்சை மிளகாய்- 7 எண்ணிக்கை,
உப்பு, எண்ணெய்-தேவையான அளவு.

செய்முறை:-

• அவலை சுத்தம் செய்துகொண்டு, ஒரு பாத்திரத்தில் அவல் மிதக்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து லேசாக சூடுபடுத்தி, பின்னர் தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.

• பெருங்காயத்தை எண்ணெயில் வறுத்துக் கொண்டு, அதனுடன் பச்சை மிளகாய், உப்பு, அவல் என எல்லாவற்றையும் சேர்த்து, நன்கு மாவு போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

• வெயிலில் பாய் விரித்து, அதில் ஒரு சுத்தமான துணியை விரித்து, அந்த மாவை முறுக்குப்போல் சீரான இடைவெளியில் துணியில் பிழிந்து கொள்ள வேண்டும். அதை காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும் அவல் வற்றல் ரெடியாகிவிடும்.