Home பெண்கள் தாய்மை நலம் அப்பாவிற்குள் ஒளிந்திருக்கும் “தாய்மை”

அப்பாவிற்குள் ஒளிந்திருக்கும் “தாய்மை”

18

husband_caring_002பொதுவாக தாய்மை எனும் வார்த்தை தாயை மட்டுமே குறிக்கும் என நாம் நினைப்பதுண்டு.
ஆனால் அது தாய்க்கு மட்டும் சொந்தமானதல்ல. ஏனெனில் ஒரு குழந்தை பிறக்கும் போது தாய் எத்தனை வலிகளையும் வேதனைகளையும் உடல்ரீதியாக கடந்து வருகிறாளோ அதையே தான் அக்குழந்தையின் தந்தையும் மனரீதியாக கடந்து வருகிறான்.
ஆதலால் தாய்மை என்பதில் ஆணின் பங்கும் உண்டு.
அரவணைப்பு அவசியம்
பெண்கள் கருவை சுமக்கும் போது வாந்தி, பதற்றம், மன அழுத்தம் என உடல் மற்றும் மனத் தொந்தரவுகளை சந்திக்கிறார்கள்.
அந்த நேரத்தில் ஆதரவாகப் பேசுதல், மருத்துவ முறையை பின்பற்றுவதற்கான ஒத்துழைப்புத் தந்து கணவர் ஆதரவாக இருக்க வேண்டும்.
நல்ல துணையா இருங்க
தாய்மை காலத்தில் எடை கூடும். அதனால், ‘அசிங்கமாகி விட்டோமோ, கணவனுக்குப் பிடிக்காமல் போய்விடுமோ’என மனைவிமார்கள் நினைப்பதுண்டு.
அப்போது அவர்களை அழகு என புகழ்வதாலும், அனுசரணையாக பேசுவதாலும் அவர்களின் மனதை மகிழ்விக்க செய்யுங்கள்.
ஒத்துழைப்பு வேணும்
சமையலறையில் அவர்களுக்கு உதவுவது, மற்ற வீட்டு வேலைகளிலும் நாட்டம் செலுத்துவது அவர்களின் வேலைப்பளுவை குறைக்கும்.
குழந்தையை பற்றி பேசுங்க
உங்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தை ஆணோ பெண்ணோ, அதை பெரிய விடயமாய் பார்க்காமல், குழந்தைக்கு பெயர் வைப்பதை தெரிவு செய்வது, குழந்தையை எவ்வாறு வளர்ப்பது போன்றவற்றை குறித்து உங்கள் மனைவியிடம் மனம் விட்டு பேச வேண்டும்,
இது அவர்களின் மனதை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
உடலுறவு வேண்டாமே
குழந்தை உருவான முதல் 3 மாதங்களும், கடைசி 3 மாதங்களும் மருத்துவரின் அறிவுரைப்படி உடலுறவைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் கருவுற்ற 16 வாரங்களுக்குப் பிறகு குழந்தையின் அசைவுகளை மனைவியின் வயிற்றில் கை வைத்தும், காது வைத்துக் கேட்டும் கணவர் உணர்வது மனைவிமார்களை குதூகலப்படுத்தும்.