Home சமையல் குறிப்புகள் அன்னாசிப் பழ சாண்ட்விச்

அன்னாசிப் பழ சாண்ட்விச்

26

download (3)தேவையான பொருட்கள்:

அன்னாசி – 2 கப் (நறுக்கியது)
காட்டேஜ் சீஸ் – 1 கப் (துருவியது)
ப்ரஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 4 டேபிள் ஸ்பூன்
கோதுமை பிரட் – 6

செய்முறை:

• முதலில் மிக்ஸியில் அன்னாசி, ப்ரஷ் க்ரீம் மற்றும் தேன் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

• பின்னர் ஒரு பிரட் துண்டை எடுத்துக் கொண்டு, அரைத்து வைத்திருக்கும் அன்னாசி கலவையை சிறிது வைத்து, அதன் மேல் சிறிது காட்டேஜ் சீஸ் தூவ வேண்டும்.

• அடுத்து அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை வைத்து, பிறகு கத்தியைக் கொண்டு நறுக்கி விட வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.

* இப்போது சூப்பரான அன்னாசிப் பழ சாண்ட்விச் ரெடி!!!