Home பாலியல் அந்தரங்க பிரச்சனையை தீர்க்கும் சித்த மருத்துவ வழிகள்

அந்தரங்க பிரச்சனையை தீர்க்கும் சித்த மருத்துவ வழிகள்

21

1443596947-1377பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவற்றால் பொதுவாக பாலியல் குறைபாடுகள் வருகின்றன. இவற்றை தீர்க்க சித்த மருத்துவத்தில் மகத்தான வழிகள் பல உள்ளன.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்

* தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.

* துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் ஒரு கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

* பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.

* முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.

* அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.

* நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.

* நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.

* சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.

சேர்க்க வேண்டியவை

முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை முதலியவைகளை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலனளிக்கும்