Home பெண்கள் அழகு குறிப்பு அந்த விஷயம் மட்டுமல்ல, கல்யாணத்துக்கு முன்னாடி இந்த விஷயத்துலயும் ஆம்பளைங்க அழகா இருக்கனும்!!!

அந்த விஷயம் மட்டுமல்ல, கல்யாணத்துக்கு முன்னாடி இந்த விஷயத்துலயும் ஆம்பளைங்க அழகா இருக்கனும்!!!

27

20-1429532568-3everyguyspre-dategroomingguide-585x439வீரம் என்றால் ஆண்களும், அழகு என்றால் பெண்களும் என்பது கலாச்சாரம். ஆனால், கர்ணம் மல்லேஸ்வரியில் இருந்து, மேரி கோம் வரை பெண்கள் வீரத்தில் கால் பதித்து பதக்கங்களை பறித்து வந்திருக்கின்றனர்.
ஆனால், நமது ஆண்கள் இன்று வரை அழகில் அக்கறைக் கொண்டதாய் யாரும் கண்டதில்லை. (இயற்கையாகவே ஆண்கள் அழகு என்பது வேற டிப்பார்ட்மென்ட்) ஆயினும் இவ்வுலகிற்கு நாம் அழகு என்பதை நிரூபிக்க வேண்டுமல்லவா!!
முக்கியமாக திருமணத்தின் போது, பெண்கள் ஆறு மாதத்திற்கு முன்பே அழகாக தொடங்கிவிடுவர். ஆண்கள் முகூர்த்தத்திற்கு அரைமணி நேரம் முன்பு தான் குளிக்கவே போவார்கள். ஆனால், இதெல்லாம் தற்போதைய நடைமுறைக்கு ஒத்துவராது.
பெண்கள் தங்களது ஆண்கள் இந்த விஷயங்களில் எல்லாம் மற்றவர் முன்பு மிக அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்….
தாடி
முகத்தை மறைக்கும் அளவு தாடி வைப்பதை முதலில் பெண்கள் வெறுக்கின்றனர். அதற்கு பதிலாய் ஸ்டைலாக, மார்டனாக தாடி வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப் படுகின்றனர். எனவே, காட்டு தாடியை வெட்டிவிட்டு, நீட்டான (Neat) தாடியை வைத்துக் கொள்ளுங்கள்.
இதழ்கள்
பெண்கள் போன்று செர்ரி நிறத்தில் இல்லாவிட்டாலும், புகைத்தும் புகைத்து கருப்பான இதழ்களை சீரமைக்க வேண்டியது கட்டாயம். நிறைய தண்ணீர் குடியிங்கள், ஆலிவ் எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்யுங்கள். இது, இதழ்களின் கருமை நீங்க உதவும்.

முகத்தில் இருக்கும் தழும்புகள்
முகப்பரு, மாசு மரு போன்றவற்றினால் ஏற்பட்ட தழும்புகளை சரி செய்ய வேண்டும். முக்கியமாக இரண்டு அல்லது மூன்று முறை ஃபேசியல் செய்ய வேண்டும். பின்பு, கற்றாழை ஜெல் அல்லது வேப்பிலை அரைத்து முகத்தில் தேய்த்து வந்தால் விரைவாக முகம் பொலிவுறும்.
வியர்வை மற்றும் எண்ணெய் வடியும் முகம்
பெண்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே பிடிக்காத விஷயம் என்றால் அது வியர்வையும், எண்ணெய் வடியும் முகமும் தான். நிறைய தண்ணீர் குடிப்பதனாலும், உடலில் நீர் அளவை சீரான முறையில் வைத்துக் கொள்வதினாலும் வியர்வை தொல்லையும், முகத்தில் எண்ணெய் வடிதலும் குறையும்.
வாய் துர்நாற்றம்
பெண்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 86% ஆண்களிடம் பிடிக்காத விஷயம் என்று பெண்கள் கூறியிருப்பது, வாய் துர்நாற்றம்! இந்த வாய் துர்நாற்றம் தொல்லையில் இருந்து தப்பிக்க வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்கவும் (டேட்டிங் போகும் போது). மற்றும் பச்சையாக பொதினா சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் சீக்கிரம் சரி ஆகும்!!