Home பாலியல் அந்த 3 நாட்களில் பெண்கள் கவலை இல்லாமல் இருக்க சில வழிகள்…!

அந்த 3 நாட்களில் பெண்கள் கவலை இல்லாமல் இருக்க சில வழிகள்…!

18

பெண் உடலின் இயற்கை நிகழ்வான உதிரப்போக்கு உண்டாகும் மாதவிடாய் நாட்களில் பெண்கள் மிகவும் அசவுகர்யமாக உணர்வார்கள். புதிய முயற்சிகளிலோ, மற்ற கடின வேலைகளிலோ ஆர்வம் இருந்தாலும் பங்கெடுக்க மாட்டார்கள்.

மாதவிடாய் நாட்களில் சில பெண்களுக்கு வயிறு வலி உண்டாகும். அப்போது மிகவும் மோசமான உடல்நிலையை உணரும் பெண்கள் மிதமான சூட்டில் தண்ணீர் பை அல்லது, சுடு மணல் போன்றவற்றை வைத்து வயிற்றில் ஒத்தடம் கொடுப்பது நல்ல பலனை தரும்.

இதுபோன்ற சமயங்களில் உதிரப்போக்கை கட்டுப்படுத்த உபயோகிக்கும் ‘நாப்கின்’களை உங்களது சவுகரிய நிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

கறைப்பட்டுவிடும் என்ற எண்ணத்தினாலேயே பெரும்பாலான பெண்களால் எந்த பணியிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது.

மாதவிடாய் கீரைகள், மெக்னீசியம் நிறைந்த உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஊழல் கேட்ட ரத்தம் வெளியேறுவதனால் உடல் அசதியாக இருக்கும். அப்போது நட்ஸ், பழங்கள், மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள் உடலுக்கு கூடுதல் வலு சேர்க்கும்.

அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அளவான முறையில் யோகா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

ஃபிரைட் ரைஸ், நூடில்ஸ், பீசா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகளை தவிர்த்து சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மாதவிடாயின் போது இரும்புச் சத்துக்கள் குறையும், அதனை அதிகளவில் அளிக்கும் காய்கறிகள், கீரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

மனதுக்கு இதமாக காலாற நடைபோடலாம். வண்டியில் சில மைல் தூரம் செல்லலாம். மனதை ஒருநிலைப்படுத்தி ரிலாக்ஸாக வைத்துக் கொண்டால் போதும். மாதவிடாய் நாட்களை எண்ணி பெண்கள் கூச்சப்படவும் தேவையில்லை,அசவுகரியமாகவும் உணர வேண்டாம்.