Home ஆண்கள் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சில எளிய வழிகள்!

விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சில எளிய வழிகள்!

508

அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறி வுறுத்தியுள்ளனர்.
இன்றைய இளம் தலைமுறையினரின் முன்பு உள்ள முக்கியமான பிரச்சனை குழந்தையின்மை தான். இதற்கு உணவுப் பழக்கமும் முக்கிய காரணமாக இருக்கிறது.
உடல் ஆரோக்கியம், உணவு பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமும் இளைஞர்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 35 சதவிகித ஆண்கள் இதுபோன்ற குறைபாடினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் அதிக புகைப்பழக்கம் மதுப்பழக்கம், மன அழுத்தம், போன்றவையும் ஆண்களின் விந்தணு குறைபாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேசமயம் ஒமேகா 3 கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியில் குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆண்களின் குறைபாட்டினை போக்க சித்த மருத்துவத்தின் மூலம் நம் முன்னோர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அவற்றை பின்பற்றினால் விந்தணு குறைபாடு நீங்கி நல்ல பலன் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
பாதம், கல்கண்டு
தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும். இரவு படுக்கைக்கு செல்ல மூன்று மணி நேரத்திற்கு முன்பே முழு மாதுளம்பழம் சாப்பிட வேண்டும்.
வால் முளகு, பாதம்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.
அரசம்பழம்
அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும். அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
முருங்கைப் பூ கசாயம்
முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை ஒருடம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும். நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
இதேவேளை ரெட்மீட் எனப்படும் மாட்டுக்கறியை சாப்பிட்டால் இளம் வயதில் மரணமடைய நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றிக்கறி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டுக்கறி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே கறிக்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது.
பன்றியில் கோழிக்கறியை விட மையோக்ளோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டுக்கறியைவிட மிகவும் குறைவு. கறி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.
மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.
மாட்டுக்கறி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தினசரி மாட்டுக்கறி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, உள்ளிட்ட நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. இதற்குக் காரணம் மாட்டுக்கறியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் உள்ளிட்டவை காணப்படுகின்றன. இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அதேபோல ஹாட் டாக் எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டுக்கறிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது. எனவே மாட்டுக்கறியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.