Home ஆரோக்கியம் அதிக வெள்ளைப்படுதல் கர்ப்பப்பையை தாக்கும்

அதிக வெள்ளைப்படுதல் கர்ப்பப்பையை தாக்கும்

19

பெண்கள் கவானக் குறைவாக இருந்தால் கர்ப்பப்பை இழக்க நேரிடும்.பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டு விடுவதுண்டு.

இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும். கர்ப்பப்பை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். இந்த வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது.

குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும்.

மேலும் சிலருக்கு தயிர் போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் குணம் நாட்பட நாள்பட நிறமும் மாறுபடும். எனவே வெள்ளைப்படுதல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி நோயின் தன்மையை அறிந்து கொள்வது நல்லது.