Home பெண்கள் பெண்குறி அதிக மாதவிடாய் போக்கு (Menorrhagia)

அதிக மாதவிடாய் போக்கு (Menorrhagia)

58

000மாதவிடாய் வழக்கத்தை விட அளவு அதிகரித்தும், அதிக நாட்களும் போனால் அதற்கு Menorrhagia என்று பெயர். இந்த போக்கு, நீர்த்தும் சிவந்தும், கட்டியாகவும், மாமிசம் கழுவிய நீர் போன்றும் அடர் சிவப்பாகவும் போகும். அதிக போக்குக்கான காரணங்கள் : கர்ப்பப்பை அலர்ஜி, வேக்காடு, கர்ப்பப்பை, கட்டிகள், கர்ப்பப்பை புற்று ஆகியவற்றால் ஏற்படுகின்றது. இந்த அதிகபோக்கு Menorrhagia 3 வகைப்படும்

1. Hyper Menorrhagia

2. Mennorrhagia

3. Poly Menorrhagia

1. Hyper Menorrhagia : வழக்கமான இடை வெளியில் வழக்கமான நாட்களில் அதிகமாக போதல்.

2. Menorrhagia : வழக்கமான நாட்களில் அளவு அதிகரித்து அதிக நாட்களும் போகும்.

3. Poly Menorrhagia: இது 21 நாட்களுக்குள் ஏற்பட்டு சுமார் 7 முதல் 14 நாட்கள் வரை போகும்.

சிகிச்சைக்குரிய ஹோமியோ மருந்துகள் :

சபினா : மிக அதிகமாகவும், பிரகாசமாகவும் சிகப்பு நிறத்துடனும் வெளிப்படும். ரத்த போக்கு சிறிது அசைந்தாலும் அதிகமாகும் சபினாவின் ரத்த போக்கு குபீர், குபீர் என வெளிப்படும். கட்டிகளுடன் கூடியது சுமார் 10 நாட்கள் இருக்கும் இடுப்பின் அடிபாகத்திலிருந்து அடிவயிற்றுக்கு போகும் கடுமையான வலி.

இபிக்கா : மாதவிடாய் ஏராளமாகவும் சிவப்பாகவும் உறைந்தும் 8 நாட்கள் வரை நீடித்து இருக்கும் பின் ஒருவாரம் சென்று மறுபடியும். உதிரபோக்கு வரும்.

ஹெமாமாலிஸ் : வயிற்றில் வலியுடன் ஏராளமான மாதவிடாய் உடல் அதிர்ச்சியினால் முதுகில் நொந்த வலியுடன் ரத்தபோக்கு.

கல்கேரியா கார்ப் : மாதவிடாய் சீக்கிரமாகவும் ஏராளமாகவும் நீடித்துமிருக்கும் உடல் பலவீனமாகவும் சில்லிப்பாகவும் இருக்கும். மூன்று வாரங்களுக்கு

த்லாப்சி : மாதவிடாய் முன்னதாகவும் ஏராளமாகவும் நீடித்தும் சுமார் 12 நாட்கள் இருக்கும்.

பாஸ்பரஸ் : பருவமடையும் காலப்பெண்களின் ரத்த சோகை கருப்பையில் வேக்காடு மாத விடாய் குறித்த காலத்திற்கு முன்பாக மிகவும் குறைந்த அளவாகவும் நீண்ட நாட்களும் வெளியேறும் தாமதமாக ஏராளமாகவும் வெளியேறும்.

டியூபர்குலினம் : மாதவிலக்கு மிகவும் முன்பாக மிக அதிகமாகவும் பல நாட்கள் நீடித்து இருக்கும் கடுமையான வலியுடன் இருக்கும்.

பெல்லடோனா : பிரகாசமான சிவந்த நிற சூடான இரத்தபோக்கு சீக்கிரம் உறைந்து நோயாளிக்கு சுடு உணர்ச்சியை தரும்.

போராக்ஸ் : மாதவிடாய் முன்னதாகவும் அதிகமாகவும் கடுமையான வலியுடன் இருக்கும்.

புரோமியம் : மாதவிடாய் முன்னதாகவும் அதிகமாகவும் பிடிப்பு வலியுடன் இருக்கும்.

பெர்.மெட் : மாதவிடாய் போக்கு குறித்த காலத்திற்கு முன்பாகவும் ஏராளமாகவும் அதிக நாட்களும் நீடித்து இருக்கும்.

பிளாடினா : விடாய் மிகவும் அதிகமாகவும் கறுப்பாகவும் கட்டி களாகவும் வெளிப்படும்.

ட்ரில்லியம்: 15 நாட்களுக்கு ஒருமுறை அதிகவிடாய் ஒரு வாரம் வரை நீடிக்கும்.