Home பாலியல் அடிக்கடி உடலுறவு செய்வது அமைதியை கெடுக்குமா ?

அடிக்கடி உடலுறவு செய்வது அமைதியை கெடுக்குமா ?

36

hqdefault3-300x207தாம்பத்ய உறவின் போது வெளிப்படும் ஆழமான மூச்சு அதிக அளவில் ஆக்சிஜனை மூளைக்கு கொண்டு செல்கிறது. இதனால் மூளை மட்டுமல்லது உடலின் அனைத்து அவயங்களும் ஆரோக்கியமடையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

செக்ஸ் உடலுக்கு மட்டுமல்ல ஆன்மாவிற்கும் நன்மை செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். தாம்பத்ய உறவின் மூலம் இன்னும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

7500 கலோரி காலி!

வாரத்திற்கு மூன்று முறை உறவில் ஈடுபடுவதன் மூலம் 7500 கலோரிகள் வரை காலியாகிறதாம். இது 75 மைல்கள் நடந்து சென்றதற்கு சமம் என்கின்றனர் பென்சில்வேனியா மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். மேலும் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் எரிக்கப்பட்டு இதயத்தை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

வலி போயே போச்சு!

செக்ஸ் மூலம் உடம்பும் மனசும் லேசாகும். எத்தகைய வலி ஏற்பட்டாலும் அதை நீக்கும் நிவாரணியாக செயல்படுகிறது. உடம்பல்லாம் அடிச்சுப் போட்ட மாதிரி வலிக்குதுப்பா என்று உங்களவர் சொன்னால் உடனே அதை நீக்கும் வழிகளில் இறங்குங்கள். மெதுவாக மசாஜ் செய்ய ஆரம்பித்து அப்புறம் விளையாட்டை தொடங்கலாம்.

இதனால் உடலில் சுரக்கும் உற்சாக ஹார்மோன்கள் உடல்வலியை போக்கிவிடும் என்கின்றனர் அமெரிக்காவின் பிரபல பாலியல் நிபுணர்கள். அதேபோல் உறவில் ஈடுபடுவதன் மூலம் மனஅழுத்தம், சோர்வு நீங்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அன்பு அதிகமாகும்

மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவின் மூலம் ஆர்கஸசத்தின் போதும் உறவின் போதும் சுரக்கும் சுரக்கும் டிஹெச்இஎ (dehydroepiandrosterone) ஹார்மோன் சாதாரண நேரத்தில் சுரப்பதை விட மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமாக சுரக்கிறதாம். தம்பத்ய உறவின் மூலம் சுரக்கும் ஆக்ஸிடோசின் தம்பதியரிடையேயான பிணைப்பை அதிகரிக்கிறது.

மேலும் தாம்பத்ய உறவின் மூலம் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கிறது. இது இதயத்தை பலப்படுத்துவதோடு பெண் உறுப்பின் திசுக்களை புத்துணர்ச்சியாக்குகிறது என்கின்றனர் நிபுணர்கள். மேலும் செக்ஸ் மூலம் ஆண் இனப்பெருக்க உறுப்பில் சுரக்கும் ஹார்மோன்கள் புரஸ்டேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறதாம்.