Home பெண்கள் அழகு குறிப்பு அக்குள் முடியை நீக்குவதற்கான சிறந்த வழிகள்!!!

அக்குள் முடியை நீக்குவதற்கான சிறந்த வழிகள்!!!

17

08-underarm-cleaning-tipsசலூனுக்குச் சென்று அல்லது விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தி அக்குள் முடிகளை எடுக்கும் முயற்சியில் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். முடியை எடுக்க உதவும் கிரீம்களின் விலையும், மற்ற இடங்களுக்கு சென்று அதை எடுக்க ஆகும் செலவுகளும் மிகவும் உயர்நது விட்டன.

ஆனால் இப்பொழுது, நாம் வீட்டிலிருந்த படியே அதிகம் செலவு செய்யாமல், கருமைத் தோற்றத்தைத் தரும் அக்குளில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க முடியும். இதை செய்யும் முறையை நாம் கீழ் காணும் பகுதியில் பார்க்கலாம். உங்களுடைய அக்குளில் உள்ள முடிகளை ஆபத்தில்லாமல் நீக்கும் வகையில் இயற்கையான கலவைகளை இப்பொழுது உங்களால் பெற முடியும். இதற்கு தேவையான பொருட்களை சரியான அளவுகளில் எடுத்து பயன்படுத்தினால் தான் நமக்கு சிறந்த பலன் கிடைக்கும்.
இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்குவதற்கான சிறந்த வழிகள்!!!
இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்குவதற்கான வழிமுறைகள்:
* இரண்டு கோப்பை சர்க்கரை, ¼ கப் தண்ணீர், ¼ கப் தேன், மற்றும் ¼ கப் புதிய எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு செப்பரேட்டரில் எடுத்துக் கொள்ளுங்கள்.
* அந்த சாஸ்பேன் அல்லது செப்பரேட்டரை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். குறைந்த நெருப்பில் இதை கொதிக்க செய்யுங்கள். இதை ஏறத்தாழ அரை மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். அப்போது இதன் நிறம் ஆழ்ந்த பழுப்பு நிறத்திற்கு மாறி விடுகின்றது. 246 டிகிரி வரும் வரை கொதிக்க விடுங்கள். இப்போது அந்தப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து அறை வெப்பநிலையில் வைத்து குளிரச் செய்யுங்கள்.
* உங்கள் அக்குள் பகுதியை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் கழுவியதும் நன்கு துடைத்து உலர வைத்து வியர்வை வராத அளவிற்கு வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் குழந்தைகள் பயன்படுத்தும் பவுடரை அங்கு போடுங்கள். இது இவ்விடத்தில் உள்ள எஞ்சிய ஈரத்தையும் எண்ணை பதத்தையும் உறிந்து கொள்ளும்.
* இப்போது இயற்கையாக செய்யப்பட்ட இந்த மெழுகு கலவையை ஒரு ஸ்பூன் அல்லது கைகளை வைத்தே அக்குளில் தடவ வேண்டும். ஒரு வேளை நீங்கள் இதை முதல் முறையாக பயன்படுத்தினால் உங்கள் உடம்பில் ஒரு சிறிய பகுதியில் முதலில் பயன்படுத்தி பாருங்கள். இவை எந்த விதத்திலாவது அலர்ஜியை ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது. முடி உள்ள கையின் மேல் பகுதி அல்லது கால் ஆகிய இடங்களில் இதை பயன்படுத்தி எவ்வாறு செய்வது என்று உறுதியாக கற்றுக் கொண்டு பின்னர் அக்குளில் பயன்படுத்தி தேவையற்ற முடியை எடுக்க முயலுங்கள். இது எந்தவிதமான அலர்ஜியையும் ஏற்படுத்தவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், இந்த கலவையை உங்களுடைய அக்குளில் தைரியமாக தடவலாம்.
* அக்குளில் தடவிய கலவையை சிறிது நேரம் கழித்து அடுத்த கையை வைத்து எடுங்கள். ஆதை எடுக்கும் போது அக்குளின் தோலை மிக உறுதியாக இழுத்து பிடிக்க வேண்டும். அப்போது தான் வலி ஏற்படாது. விரைவாக அங்கு ஒட்டியிருக்கும் மெழுகு போன்ற கலவையை பிடுங்கி எடுக்க வேண்டும். இவ்வாறு அழுத்தமாக இழுக்கும் போது தான் அந்த இடத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.
* அனைத்து முடியையும் எடுத்த பிறகு மெழுகு கலவை ஏதேனும் மீதமிருந்தால் அதை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் சோப்பை கொண்டு கழுவி விட வேண்டும். இந்த காரியத்தை செய்த பின் நல்ல மாய்ஸ்ட்ரைஸரை பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் தோலை மிருதுவாகவும் மற்றும் மென்மையாகவும் வைக்கும்.
இந்த மெழுகு போன்ற இயற்கையான கலவையை குளிர்ந்த இடத்தில் வைத்து, எப்போதெல்லாம் முடியை எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அப்போதெல்லாம் இதை எடுத்து பயன்படுத்த முடியும். இதை உங்கள் கால், கைகள் மற்றும் அக்குள் ஆகிய இடங்களில் பயன்படுத்தலாம். இதனை செய்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்து நெடுநாட்களுக்கு பயன்படுத்தலாம்.