இளம் பெண்களின் பாலியல் வழிகாட்டி என்ற இந்த புத்தகத்தின் உள்நோக்கமே எந்த பெண்ணும் இளம் பருவத்தில் அறிந்தோ, அறியாமலோ கற்பமாவதை தடுப்பது தான். திருமணத்திற்கு முன் உடலுறவில் ஈடுபடுவதன் காரணமாகவே இளம் வயது கர்ப்பம் பெரும்பாலும் நிகழ்கிறது. இப்படி ஏட்படும் கர்ப்பம் பெற்றோராலும் ,சமூகத்தினராலும், உறவினராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதோடு, பெண்ணின் மனோநிலை , எதிகாலம், குடும்பத்தாரின் கவுரவ பிரச்னை இப்படி பல இதில் அடங்கிஇருக்கும்.
அது மட்டுமல்லாமல் இப்பருவத்தில் உண்டாகும் கர்ப்பம் தாயின் உடல்நலதித்கு பெரிய சவாலாக இருக்கிறது. அதுமட்டுமின்றி மனம், உடல், உணர்வு, எண்ணம்அதனையும் இது பாதிக்கிறது. இபருவதில் இனபெருக்க உறுப்புகள் முழுமையாய் வளர்ச்சி அடையாத காரணத்தால் உடல் நல குறைவோடு ஓர் உயிரை தன் கருப்பையில் சுமந்து வளர்க்கும் அளவிற்கு சக்தியற்றவளாய் இருக்கிறாள். மேலும் கெட்டுபோனவள் முறைதவரியவல் ,கற்பு இழந்தவள் போன்ற முத்திரைகள் சமுதாயத்தில் அவள் மீது சுமத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறாள். அதோடு அவளுக்கு எதிர்காலமும் ஓர் கேள்விக்குறியாக அமைகிறது. கருச்சிதைவு என்று பார்த்தோமானால் அது ரகசியமாக நடந்தாலும் அதை கையாளும் மருத்துவர்கள் நல்ல திறமையுள்ளவர்களாக இருக்க வேண்டும். மருத்துவர்களில் சிலபேர் இப்படிப்பட்டவர்களிடம் நடந்துகொள்ளும் முறையே பயங்கரமானதாக இருக்கும் . அதோடு கருச்சிதைவு நடந்தபின் அப்பெண் மனரீதியாக பல வழிகளில் பாதிப்புக்கு உள்ளாகிறாள். இதில் வருத்தப்பட வேண்டிய விசியம் என்னவென்றால் 2/3 பேருக்கு கற்பமவோம் என்பது தெரியாமலே ஆணுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் . இப்படி இக்கட்டான சூழ்நிலை வரும்போது அதற்கு காரணமாய் இருந்த ஆணும் அவளை நிராகரித்து விடுகிறாள். இப்படி பல்வேறு வழிகளில் பெண்கள் தன் வாழ்வில் பயங்கரமாக பாதிக்கபடுகிறாள்.கெட்டுபோனவள் என்ற முத்திரையுடன் பெண்ணை யாரும் திருமணம் செய்ய சமூக சிந்தனையுள்ள ஒரு சிலர் முன்வந்தாலும் அவர்களை இச்சமூகம் ஏளனத்துடன் பார்க்கிறது. அனால் சமந்தப்பட்ட ஆண் சுலபமாக திருமணம் செய்து கொள்ள முடியும்.
திருமணம் செய்ய முன்வரும் ஆண்மகனுக்கு எதாவது கோளாறு இருக்குமோ என்று சந்தேகப்பட தயங்குவது கிடையாது. இப்படியான அப்பெண் சமுதாயத்தில் அணைத்து அந்தஸ்துகளையும் இழந்து பதிக்கப்பட்ட பெண்ணாக மாற்றபடுகிறாள்.அவ்வாறு அவள் பாதிப்படைய யார் காரணம் என்று இந்த சமுதாயம் யோசித்து பார்க்க வேண்டும். இனி வரும் கால கட்டங்களிலாவது இப்படிப்பட்ட நிலை பெண்ணிற்க்கு வரக்கூடாது என்பது இந்நூலின் முக்கிய நோக்கம்.
இவள் எல்லாவற்றையும் மீறி அப்பெண் தான் சுமக்கும் குழந்தையை பெற்றெடுத்தால் என்றால் ஒரு பாவமும் அறியாத அக்குழந்தையும் இச்சமுதாய ஏச்சுகளுக்கும், ஏளனங்களுக்கும் தப்புவது கிடையாது.அப்பன் பேர் தெரியாத குழந்தை , எவனுக்கு பிறந்ததோ என்று அந்த பச்சிளம் குழந்தையையும் இச்சமுதாயம் ஏற்க மறுக்கிறது.