சூடான செய்திகள்:ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் இணைந்து வாழ சட்டம் அனுமதி அளித்துவிட்டது. ஆனால், அவர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தது. ஆனால், இப்போது, அவர்களுடைய தண்டுவட அணுவை வைத்து குழந்தையை குளோனிங் மூலம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை விஞ்ஞானிகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
ஜப்பான் விஞ்ஞானிகள் எலிகளில் நடத்திய இந்த குளோனிங் ஆய்வு வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளனர். ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதிகளின் தண்டுவட அணுவை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் எலிக்குட்டிகள் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
பெண் பாலின தம்பதியின் அணுக்கள் மூலம் உருவான குட்டிகள் ஆரோக்கியமாகவும், ஆண் பாலினத் தம்பதியின் அணுக்கள் மூலம் ஆரோக்கியம் குறைந்த குட்டிகள் உருவானதாகவும் விஞ்ஞானிகள் கூறினர்.
ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணுக்குள்ளும் அவர்களுடைய அப்பா மற்றும் அம்மாவின் மரபணுக்கள் இருக்கும். அவற்றை பயன்படுத்தியே இந்த குளோனிங் குட்டிகள் உருவாக்கப்பட்டன. ஒரு சில ஆண்கள் மற்றும் பெண்களிடம் தந்தை அல்லது தாயின் அணுக்கள் மட்டுமே இருக்கும் அவர்களி அணுக்களை பயன்படுத்தி குளோனிங் செய்வது இயலாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதற்கு பதிலாக கரு முட்டைகளில் உள்ள அணுக்களைப் பயன்படுத்தியோ, விந்தணுக்களை பயன்படுத்தியோ மட்டுமே குளோனிங் முறையில் உற்பத்தி செய்ய முடியும்.
விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு ஆண், பெண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறார்கள்.