செக்ஸ்! இந்த வார்த்தையை பயன்படுத்தினாலே நமது சமூகத்தில் “அய்யோ, என்ன இப்படி எல்லாம் பேசறாங்க..” என்று தான் பார்ப்பார்கள். ஆனால், தெருக்களில், குழாயடி சண்டைகளில் பெண்களும், ஏகபோக சண்டைகளில் ஆண்களும் “அம்மா, ஆத்தா..” என்பதை கூட கெட்ட வார்த்தையாக பயன்படுத்துவார்கள்.
ஒருவர் செக்ஸில் / உடலுறவில் அடிக்ட்டாக இருக்கிறார் என்பதற்கு அந்த சமூகமும் தான் ஒருவகையில் பொறுப்பு. கற்றுக் கொடுக்க வேண்டியதை, உயிர்கள் மத்தியில் இயல்பான, இயற்கையான ஒன்றை செய்யத்தகாத செயல் என்ற முறையில் மூளையில் பதிய செய்வது தான் அவர்கள் அது என்ன என்று உற்றுநோக்கவும், அதில் மூழ்கவும் காரணியாக இருக்கின்றன.
அறிகுறி #1
உடலுறவில் ஈடுபட்ட பிறகும் கூட சுய இன்பம் காண முயல்வது.
அறிகுறி #2
ஓர் ஆய்வில் செக்ஸில் அடிக்ட்டாக இருப்பவர்கள் எப்போதுமே நேரத்திற்கு அலுவலகம் செல்வதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறி #3
செக்ஸில் அதிக அடிக்ட்டாக இருப்பவர்கள் அதிகம் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட முயல்வார்களாம். உங்களுக்கு தெரியாத பெண்களின் மார்பகங்கள் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள்! ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது? எப்படி தடுக்கலாம்? உங்கள் இதயம் பத்திரமாக இருக்க இதெல்லாம் செய்கிறீர்களா?
அறிகுறி #4
செக்ஸில் ஒருவர் அதிக அடிக்ட்டாக மாறிவிட்டால் அவரால் அதை நிறுத்த முடியாது, பணம் செலவழித்தாவது அதை அனுபவித்துவிட வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கும்.
அறிகுறி #5
தொடர்ந்து டேட்டிங் செய்ய ஆசைப்படுவார்கள். ஒரு நபருடன் டேட்டிங் முடித்த மறுநாளே கூட வேறு நபருடன் டேட்டிங் செய்ய அவர்களது மனம் அலைபாயும்.
அறிகுறி #6
உடலுறவில் ஈடுபட முடியாவிட்டால், அவர்களுக்குள் எரிச்சல் அதிகரிக்கும். வேறு எந்த வேலையிலும் அவர்களால் நாட்டம் செலுத்த முடியாது. உங்களுக்கு தெரியாத பெண்களின் மார்பகங்கள் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள்! ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது? எப்படி தடுக்கலாம்? உங்கள் இதயம் பத்திரமாக இருக்க இதெல்லாம் செய்கிறீர்களா?
அறிகுறி #7
செக்ஸில் அதிக நாட்டம் உள்ளவர்கள் அதிகமாக பொய் கூறுவார்கள். ஒரு பொய்யை கூறிவிட்டு, அதை மறைக்க பல பொய்கள் கூறுவார்கள்.
அறிகுறி #8
அவர்கள் செக்ஸில் அதிகம் ஈடுபடுவது, அடிக்க்ட்டாக இருப்பதை அவர்கள் பெருமிதமாக, ஆச்சரியமாக கருதுவார்கள்.
அறிகுறி #9
தங்கள் மடிக்கணினி மற்றும் மொபைல் பயன்படுத்தும் போது, யாருக்கும் தெரியாமல், பயன்படுத்துவது. யாரேனும், தங்களுக்கு தெரியாமல் இவற்றை தொட்டால் கூட சடாரென்று கோபித்துக் கொள்வது.