பொது மருத்துவம்:ஒவ்வொருவரது கனவும் மற்றவர்கள் முன்னிலையில் அழகாக சிரிக்க வேண்டும் என்பதே.
ஆனால் பலருக்கு அவர்களது மஞ்சள் நிற பற்களால் மற்றவர்கள் முன்னிலையில் சிரிப்பதை தவிர்த்து விடுகிறார்கள்.
பற்கள் மஞ்சள் நிறமடைவது புகைப்பழக்கம் உள்ளவர்களிடன் மட்டுமன்றி எல்லோரிடமும் காணப்படுகிறது.
இதற்கு காரணம் அதிகமான சர்க்கரையை உட்கொள்வதனாலும் கறுப்பு கோப்பி, தேநீர் அருந்துவதுமே.
இரசாயணப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் பற்களை வெண்மையாக்குவது எப்படி என்று யோசிக்கிறீர்களா?
வெண்மையான பற்களிற்கு இயற்கையான தீர்வைப் பெறுவது எப்படி?
தேங்காய் எண்ணெய் பற்றி நீங்கள் நன்கறிந்ததே. இது முகம், முடியின் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி உடலின் முழு ஆரோக்கியத்திற்கும் கைகொடுக்கிறது.
ஆனால் தேங்காய் எண்ணெய்யால் வெண்மையான பற்களை பெற முடியும் என்பதை நம்புகிறீர்களா? தேங்காய் எண்ணெய், சமையல் சோடாவை சேர்த்து பயன்படுத்துவதனால் 2 நிமிடங்களில் வெண்மையான பற்களைப் பெற முடியும்.
செய்முறை:
தேங்காய் எண்ணெய்யையும் சமையல் சேடாவையும் சம அளவாக எடுத்து நன்றாக கலந்து கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
உங்கள் பற்பசைகளிற்கு பதிலாக இதனைப் பயன்படுத்துவதனால் சிறந்த பலனைப் பெற முடியும். இதனை உங்கள் குளியலறையில் அல்லது குளிரூட்டியில் வைத்திருக்க முடியும்.
தேங்காய் எண்ணெய் வாயின் சுகாதாரத்தைப் பேணுவதுடன் பற்கள், முரசுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
உதடுகளில் வெடிப்புக்கள் ஏற்படும் போதும் தேங்காய் எண்ணெய்யை தடவினால் இலகுவான தீர்வைப் பெற முடியும்.