ஆணோ, பெண்ணோ, திருமணத்திற்காக பேசி முடிவு செய்த நாளில் இருந்து திருமண நாளுக்கு முந்தைய நாள் இரவு வரை சுற்றி இருக்கும் நண்பர்கள் வட்டாரம் அதிகம் பேசுவது முதல் இரவைப் பற்றிதான்.
ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந்த விசயங்களைப் பற்றி பேசி ஓரளவு பதற்றத்தையே ஏற்படுத்தியிருப்பார்கள். புதுமணத் தம்பதியரும் பரிட்சைக்கு தயாராகி வரும் மாணவர்களைப் போல ஒருவித டென்சனுடனேயே முதலிரவு அறைக்கும் நுழைவார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரிலாக்ஸ்சாக இருந்தாலே பாதி வெற்றிதான். முதல் இரவுக்கு தயாராகும் புதுமணத்தம்பதியரா? அப்படி எனில் அவசரப்படாமல் இந்த கட்டுரையை படியுங்கள்..
பரிசோதனை முயற்சி வேண்டாம்
தாம்பத்திய உறவிற்காக முதல்முறையாக இருவரும் நெருங்கும்போது, அனுபவமின்மையினால் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும் எனவே எதைப்பற்றியும் கவலைப்படாமல் பொறுமையுடன் கையாளுவது அவசியம். புதிதாய் திருமணமாகி வந்துள்ள பெண் தன்னைப்பற்றி தவறாக நினைத்துவிடுவாளோ என்ற எண்ணத்திலேயே பதற்றம் தொற்றிக்கொள்ளும். எனவே உறவு தொடங்கும் முன்பே அவசரப்படாமல் சிறிது நேரம் முன்விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இது பெண்ணை அச்சுறுத்தாமல் பரவசமூட்டும். முதல் நாளிலேயே வெற்றிகரமாக அமையவேண்டும் என்பதற்காக பரிசோதனை முயற்சியில் ஈடுபடவேண்டாம், ஏனெனில் அது விபரீதமாகிவிடும்.
வலியால் பதற்றம்
பெண்ணுக்கு வலி ஏற்படுவது இயற்கை, சிலருக்கு கன்னித்தன்மை இழப்பதன் காரணமாக ரத்தம் வர வாய்ப்புள்ளது. இதனால் பெண்ணுக்கு பதற்றம் ஏற்படும். எனவே பெண்ணின் பதற்றத்தைப் போக்கி சகஜ நிலைக்கு கொண்டுவரவேண்டியது ஆண்கள்தான். பெண்ணுக்கு வசதியான பொஸிசன்களை கற்றுத்தர வேண்டும். பாதுகாப்பான, மென்மையான அணுகுமுறைகளை கையாளவேண்டும். அப்பொழுதுதான் உறவின் மகிழ்ச்சியை இருவரும் அனுபவிக்க முடியும்
பாதுகாப்பு அவசியம்
முதல் உறவின் போது எல்லா பெண்களுக்குமே ரத்தம் வரவேண்டும் என்று அவசியமில்லை. ரத்தம் வரவில்லை என்றால் அந்த பெண் கன்னித்தன்மை அற்றவளாக இருப்பாளோ என்ற சந்தேக விதை எழத்தேவையில்லை. ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற காரணங்களினால் கன்னித்தன்மை ஜவ்வு கிழிந்து போக வாய்ப்புள்ளது. எனவே ரத்தம் வரவில்லை என்றாலும் அதை எண்ணி கவலைப்பட வேண்டியதில்லை.
உடனடியாக குழந்தை பேறு வேண்டாம் என்று நினைக்கும் தம்பதியர் மருத்துவர்களை கலந்து ஆலோசித்து அதற்கேற்ப பாதுகாப்பான உறவினை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பம் தரித்த பின்னர் கவலைப்படுவதை விட வருமுன் காப்பது நல்லது.
பெண்மையும், மென்மையும்
நம்மை ‘நிரூபித்தாக’ வேண்டும் என்பதற்காக முதல் நாளிலேயே மிகவும் சிரத்தை எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பெண்ணுக்கும் அது முதல் ராத்திரி தானே. பெண்ணுக்கும் அதைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும், அது அவர்களை பரவசப்படுத்தவே செய்யும். எனவே பல்வேறு ‘சோர்ஸ்கள்’ மூலம் பெற்ற கேள்வி ஞானத்தை எல்லாம் முதல்நாளன்றே மனைவிக்கு கற்றுத்தர வேண்டியதில்லை.
முதல்நாள் என்பது அறிமுகமாகவே இருக்கட்டும். மென்மையாகவே அது தொடங்கட்டும். அப்பொழுதுதான் மறுநாட்களிலும், வரும் நாட்களிலும் எதிர்பார்ப்பும் அதிகமாகும், உறவும் போரடிக்காமல் இனிமையாக தொடரும்