கள்ளக்காதலால் பல்வேறு குடும்பங்கள் சின்னபின்னாமாகி, கணவன்-மனைவி தங்களை மறந்து துணையை நாடிச் செல்வதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
திருமணமாகி, மனைவி ஒன்றிரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு தாய்மையின் பாசத்தில் மூழ்கி இருப்பார்.
இந்த கால கட்டத்தில்தான் செக்ஸ் ரீதியாக, கணவன் ஏமாற்றமடைந்து வடிகால் தேடி மற்ற பெண்களை நாடிச் செல்கின்றான்.
குறிப்பாக, குழந்தை பிறப்புக்காக மனைவி புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது இதுபோன்ற சந்தர்ப்பங்கள் கணவனுக்கு அதிகரிக்கின்றன.
கணவன் அல்லது மனைவிகளின் அதிகப்படியான பற்றுதலும் துணைகள் வெளியே போவதற்கான காரணமாக சில நேரங்களில் அமைந்து விடுகிறது.
அன்புக்கும், பாசத்துக்கும்கூட எல்லை உண்டு. திகட்டத் திகட்ட துணையை கவனித்து அனைத்து நேரமும், அனைத்து சூழ்நிலையிலும் அவர் தன்னுடன்தான் இருக்க வேண்டும்; தான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்.
அவர் முழுக்க முழுக்க எனக்கு மட்டும்தான் என்கிற ஆக்கிரமிப்பான அன்பின் வெறித்தனமான வெளிப்பாடும் உறவுகளை சிறைபோல உணரச் செய்துவிடும்.
இப்போது இயல்பாகவே சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கும் உணர்வே இன்னொரு முறையற்ற உறவுக்கு வித்திடுகிறது.
இப்படியே வெளியே கிடைக்கும் அந்த முறையற்ற உறவு பேரழகியாக/பேரழகனாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அங்கே உருவ மதிப்பீட்டுக்கு பெரும்பாலும் இடம் இல்லை.
ஆரம்பத்தில் பேச்சுத் துணைக்கு என்று ஆரம்பித்து அதுவே முறையற்ற உறவில் சென்று முடியும். அதாவது, ஒரு நூலிழையின் தவறுதலில் பிறக்கும் உறவு அது. சில சமயங்களில் மேற்படி கள்ளக்காதலில் சிக்குபவர்கள் தனிமையில் வசிப்பவர்களாக இருக்கலாம்.
அவருடைய துணையிடமிருந்து போதுமான அரவணைப்பு கிடைக்காதவராக இருக்கலாம். அதேசமயம் இந்த இணைப்பானது, எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற நிச்சயமற்ற உறவாகவே பெரும்பாலும் இருக்கிறது.
சரியான தருணம் வரும்போது இரட்டைக் குதிரை சவாரி சலித்துப்போய் மேற்கொண்டு அதை கொண்டு செல்ல இயலாத நிலை உருவாகும்.
இந்த சூழ்நிலையில், கள்ளக்காதலுக்கு குட்பை சொல்லிவிட்டு தன் குடும்பத்துடன் நிரந்தரமாக ஐக்கியமாகும் வகையினரும் இருக்கின்றனர்.
இதனால், கணவனும், மனைவியும் அந்தந்த நேரத்துக்கு தங்களின் துணைக்கு சரியான ஊட்டம் அளித்தால் எந்த பிரச்னையுமின்றி உறவு சுமூகமாக தொடரும்.