Home ஜல்சா கள்ளக்காதல் உச்சம் முனகல் சதம் கேட்டு எழுந்த கணவர் அதிர்ச்சி

கள்ளக்காதல் உச்சம் முனகல் சதம் கேட்டு எழுந்த கணவர் அதிர்ச்சி

588

கள்ள காதல் உறவு:மயக்க நிலையில் இருந்த கணவர் தெளிந்து உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக் காதலர்கள் இருவரும் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ளது டம்டம் பாறை. இங்கு முகமது சமீர் என்பவர் தனது மனைவி பிர்தோஷ் என்பவருடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கும் பிர்தோஷ்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை ஒன்றும் உள்ளது.

குடும்ப சூழ்நிலை காரணமாக முகமது சமீர் அரபு நாட்டில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். வெளிநாட்டில் இருக்கும் அவர் ஆண்டுக்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இதனால் பிர்தோஷ் மல்லாகாப்பில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்த நிலையில் டிரைவர் வேலை பார்க்கும் முகமது யாசிக்கின் உறவினர் வீடு அவரது பெற்றோர் வீட்டிற்கு அருகில் இருந்துள்ளது .

இந்த நிலையில் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த சந்திப்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்கள். இதனை அறிந்த பிர்தோஷின் தந்தை ஜாசத்உசேன் பல முறை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முகமது சமீர் கடந்த மாதம் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கள்ளக்காதலர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் இருவரும் சேர்ந்து முகமது சமீரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். இதன்படி பிர்தோஷ் தன் கணவரை அழைத்துக்கொண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார் அதில் டிரைவராக முகமது யாசிக்கும் சென்றுள்ளார்.

சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது முகமது சமீர் மட்டும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தம்பி அண்ணன் எங்கே என்று கேட்டுள்ளார். இதற்கு பதில் ஏதும் தெரிவிக்காமல் தன் குழந்தை குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டில் இருந்த 60 பவுன் நகையோடு மாயமாகிவிட்டார்.

இதனால் போலீசுக்கு தகவல் தெரிவித்த முகமது சமீரின் தம்பி புகாரின்பேரில் போலீஸார் இருவரையும் தேடி வந்த நிலையில் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கொடைக்கானலுக்கு சென்று வரும் வழியில் அனைவரும் இளநீர் அருந்தியுள்ளனர். அதில் 15 மயக்க மாத்திரைகளை கலந்து முகமது சமீருக்கு கொடுத்துள்ளனர். இதனால் அவர் மயங்கி காரிலேயே விழுந்துள்ளார் இதனால் அவர் இறந்துவிட்டதாக கருதி இருவரும் காரிலேயே உல்லாசம் அனுபவித்தனர்.

முனகல் சத்தம் கேட்டு எழுந்த முகமது சமீரை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இருவரும் சேர்ந்து கார்லயே முகமது சமீரை கொலை செய்து வரும் வழியில் காட்டுப்பகுதியில் அவரது சடலத்தை வீசி எரித்துள்ளனர். அதன் பிறகு ஹைதராபாத் மும்பை போன்ற இடங்களில் சுற்றித் திரிந்து விட்டு கடைசியாக பெங்களூரில் தங்கியுள்ளனர். அப்போது தான் போலீசில் சிக்கியுள்ளனர்.