பாலியல் பிரச்சனைகள்:பொதுவாக நம்மில் பலர் நம் நண்பருடனோ அல்லது சில உறவுகளுடனோ தவறான புரிதலால் பல நாட்கள் பேசமாலே இருந்திருப்போம். இதன் மூல காரணமாக கருதப்படுவது அவர்களை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல் இருத்தலே. அல்லது அவர் நம்மை சரியாக புரிந்து கொள்ளலாமலே இருப்பதே. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் கட்டாயம் ஒரு தவறான புரிதல் நமக்கு இருக்கத்தான் செய்கிறது. அதே போன்றுதான் இன்று நாம் மறைந்து செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் உண்மையும் இருக்கிறது, பொய்மையும் இருக்கிறது
அவற்றில் நாம் எது மெய், எது பொய்..? என்பதை அறியாமலே செய்து வருகின்றோம். அந்த வகையில் சுய இன்பத்தை பற்றிய பல தவறான தகவல்கள் இன்று பெரும்பாலான மக்களிடம் பரவி கிடக்கின்றது. ஒரு இயல்பான விஷயமாக கருத வேண்டிய இதில் உள்ள பொய்யான புரிதலையும், மெய்யான தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இது தவறா..? இன்று நாம் மிகவும் கூச்சப்பட்டு மறைத்து வைத்துள்ள ஒரு விஷயம்தான் இந்த சுய இன்பம் கொள்ளுதல். பொது வெளியில் எந்த விஷயத்தை பற்றி பேச தயங்குகிறமோ அதுவே மிக பெரிய சிக்கலான ஒன்றாக மாறி விடிகிறது. அதில் ஒன்றுதான் சுய இன்பமும். இதனை தவறான பார்வையில் பார்க்கின்றவர்களே அதிகம். ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் இது உடலுக்கு நல்லது என்றே கூறுகின்றனர்.
பொய்மை #1 சுய இன்பம் கொண்டால் கட்டாயம் கண் தெரியாமல் போய்விடும் என்று பலர் நம்பி கொண்டிருக்கின்றனர். சுய இன்பம் கொள்ளவதால் எந்த வகையிலும் அது உங்கள் கண்களை பாதிக்காது. கண் கோளாறு, கண்ணில் புரை போன்றவை இதனால் ஏற்படும் என மனதில் ஒரு பொய்யான வட்டத்தை பெரும்பாலானோர் போட்டு கொண்டுள்ளனர்.
பொய்மை #2 ஆண்கள் சுய இன்பம் கொள்வதால் அது அவர்களுக்கு விறைப்பு தன்மையை ஏற்படுத்தும் என்ற வதந்தி பரவி கிடக்கிறது. அத்துடன் பிறப்புறுப்புகள் ஒழுங்காக செயல்படாது என்றும், அவற்றின் தன்மை மாறி விடும் என்றும் சிலர் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும்.
பொய்மை #3 சுய இன்பம் கொண்டால் அது முடி உதிர்வை ஏற்படுத்தி வழுக்கை விழ செய்யும் என பலரும் நம்புகின்றனர். அத்துடன் இது அவர்களின் முடியின் வளர்ச்சியை நிறுத்தி விடும் என்றும் பெரிதும் நம்புகின்றனர். சுய இன்பத்தால் முடி உதிர்வு ஏற்படாது என்றே ஆராய்ச்சிகளும் கூறுகின்றது.
பொய்மை #4 மாதவிடாய் காலங்களில் பெண்கள் சுய இன்பம் கொண்டால், அவர்களின் கர்ப்பப்பை சிதைவடைந்து விடும் என்றும், அதனால் குழந்தை பெற்று கொள்ள முடியாது என்றும் மிக மோசமான கருத்து பரவி உள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் அளவோடு செய்தால் அது ஆபத்தை தராது. அப்படிதான் இதுவும்.
பொய்மை #5 திருமணத்திற்கு பிறகு சுய இன்பத்தை ஆண்களும் பெண்களும் செய்வதில்லை என்ற பொய்யான கருத்து உள்ளது. திருமணம் ஆன பிறகும் இவர்கள் இதனை மேற்கொள்வார்கள் என்றே ஆராய்ச்சிகள் கூறுகின்றது. சிலர், தங்கள் இல்லற வாழ்வில் இன்பம் இல்லை என்றால் சுய இன்பத்தை நாடுவார்கள். பொய்மை #6 ஆண்களின் பிறப்புறுப்புகள் பாதிக்கப்பட்டு விந்தணு உற்பத்தி நின்று விடும் என்றும், விந்தணு குறைபாடு ஏற்படும் என்றும் பல ஆண்கள் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இது முற்றிலுமாக தவறாக புரிந்து கொண்ட ஒன்று. சுய இன்பத்தால் எந்த வித விந்தணு பாதிப்பும் ஏற்படாது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொய்மை #7 ஆண்கள் சுய இன்பம் கொள்வதால் பிறப்புறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாது என்ற பொய்மை கருத்து அதிகம் பரவி உள்ளது. அத்துடன் அவற்றில் நோய் ஏற்படும் என்றும் சொல்படுகிறது. கைகளை சுத்தமாக வைத்து கொண்டு இதனை செய்தால் எந்தவித பாதிப்பும், நோய் தொற்றுகளும் இருக்காது.
மெய்மை #1 நம்மை தவிர யாருமே சுய இன்பம் கொள்ளவில்லை என்று பலர் எண்ணி கொண்டிருக்கின்றனர். உண்மையில் பெரும்பாலான மக்கள் இதனை வெளியில் பேச தயங்குகின்றார்களே தவிர, பலர் இதனை செய்கின்றனர். 15 முதல் 18 வயதுடைய 70% ஆண்களும் 60% பெண்களும் சுய இன்பம் கொள்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
மெய்மை #2 மனதில் உள்ள அழுத்தம், குழப்பம், தலைவலி போன்றவை இதனால் குணமாகவும். அத்துடன் பல பெண்கள் பிறப்புறுப்பில் அதிக வறட்சி ஏற்படுகிறது என வருந்து கின்றனர். இதனால் ஏற்படும் வலியையும் சுய இன்பம் சரி செய்து விடுகின்றது. மேலும் இது ஆரோக்கியமான மனநிலையை நமக்கு தந்து உற்சாகமாக வைக்கும்.
மெய்மை #3 மாதவிடாய் காலத்தில் பெண்கள் சுய இன்பம் கொண்டால், அவர்களின் மாதவிடாய் வலியை குறைக்குமாம். மேலும் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம், தலை வலி, எரிச்சல் ஆகியவற்றையும் இது குணப்படுத்தும். ஆனால், குறிப்பிட்ட அளவே இதனை செய்தால் நலம்தான். அதிக முறை செய்தலே சில தீமைகளை தர கூடும்.
மெய்மை #4 ஆண்கள் சுய இன்பம் கொள்வதால் ப்ரோஸ்டேட் புற்றுநோயை தடுக்க முடிகிறது. இது அவர்களின் பிறப்புறுப்பில் ஏற்பட கூடிய புற்றுநோய் செல்களை உருவாகாமல் தடுக்கிறதாம். ஆனால், அடிக்கடி இதனை செய்ய கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முக்கிய குறிப்பு :- எந்த ஒரு செயலும் அளவாக இருந்தால் அது உடலுக்கு எந்த வித பாதிப்பையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. சுய இன்பம் கொள்ளும் முன் கட்டாயம் கைகளை சுத்தம் செய்தல் வேண்டும். அத்துடன் நீங்கள் அதற்காக பயன்படுத்தும் பொருட்களையும் சுத்தம் செய்தே உபயோகிக்க வேண்டும். இல்லையேல் இது நோய் தொற்றுக்களை ஏற்படுத்த கூடும்.