ஆண்களின் பாலியல்:விறைத்த நிலையில் ஆண்குறி சிலருக்கு ஏதேனும் ஒரு பக்கமாக வளைந்திருக்கும். இது பெரும்பாலும் சாதாரணமானதே. பக்கவாட்டில், கீழ்நோக்கி அல்லது மேல்நோக்கி இப்படி வளைந்திருப்பது உடற்கூறில் இருக்கும் வழக்கத்திற்கு மாறான மாற்றமாகும். எனினும், சிலசமயம் ஏதேனும் உடல் பிரச்சனைகளால் ஆண்குறி வளைந்திருக்கலாம், அதற்கு மருத்துவக் கவனிப்பு தேவைப்படலாம்.
இயல்பாக வளைந்திருப்பது (The normal curvature)
மனித உடற்கூறு கச்சிதமாக சமச்சீர்மை கொண்ட வகையில் உடலை உருவாக்குவதில்லை, ஆண்குறி விறைக்கும்போது ஏதேனும் ஒரு பக்கம் அது சிறிதளவு வளைந்திருக்கலாம். விறைப்புத் திசுவில் இருக்கின்ற மென்மையான தசைகள் தளர்ந்து ஆண்குறிக்குள் அதிக இரத்த ஓட்டம் செல்லும்போது ஆண்குறி விறைக்கிறது. இந்நிலையில், ஆண்குறியில் உள்ள மென்மையான பஞ்சு போன்ற விறைப்புத் திசு (கார்ப்போரா காவெர்னோசா) முழுதும் இரத்தம் உட்சென்று நிரம்புகிறது, இப்படி உள்ளே சென்று அதிக அழுத்தத்தில் இரத்தம் சிக்கிக்கொள்வதால் ஆண்குறி தடித்து விறைக்கிறது.
விறைத்த நிலையில் இருக்கும் ஆண்குறியின் சாய்வுக் கோணமானது, ஆண்குறியின் அளவு, உள்ளிருக்கும் எலும்புப் பகுதி தண்டின் மூலம் இடுப்பெலும்பின் பின்பக்கத்தில் இணைந்திருக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.
நீண்ட ஆண்குறியும் சிறிய தண்டும் கொண்டுள்ள ஆண்களுக்கு, ஆண்குறி விறைக்கும்போது ஆண்குறி கீழ்நோக்கி வளையும், தண்டு ஆண்குறியைவிட நீளமாக உள்ள ஆண்களுக்கு, ஆண்குறி நேராக இருக்கும் அல்லது மேல்நோக்கி வளையும்.சில ஆண்களுக்கு ஆண்குறி இடது அல்லது வலதுபுறம் வளைந்து இருக்கும்.
விறைத்த நிலையில் பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்குறி மேல்நோக்கியே நிற்கும் அல்லது செங்குத்தாக மேல்நோக்கி அல்லது செங்குத்தாக கிழ்நோக்கி அல்லது கிடைமட்டமாக நேராக இருக்கும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஆய்வில், வெவ்வேறு விறைப்புக் கோணம் கொண்டிருக்கும் ஆண்களின் விகிதம் பற்றிய விவரத்தை கீழுள்ள அட்டவணையில் காணலாம். அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கோணங்கள் அடிவயிற்றில் இருந்து அளவிடப்படுகின்றன. ஆகவே பூச்சியம் டிகிரி (0°) என்றால், ஆண்குறியானது வயிற்றுப்பகுதிக்கு எதிராக வானை நோக்கி செங்குத்தாக இருக்கிறது என்று பொருள். 90 டிகிரி என்றால், கிடைமட்டமாக முன்னோக்கி நீண்டிருக்கிறது என்று பொருள், 180 டிகிரி என்றால் செங்குத்தாகக் கீழ்நோக்கி (தரையை நோக்கி) உள்ளது என்று பொருள்.
பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்குறி நேராக இருக்கிறது என்றாலும், சிறிதளவு ஆண்குறி வளைந்திருப்பது பிரச்சனையல்ல. 30° வரை ஆண்குறி வளைந்திருப்பது பிரச்சனையல்ல, அதற்கு மருத்துவக் கவனிப்பு எதுவும் தேவையில்லை என்று கருதப்படுகிறது. ஆனால், 45°-க்கும் மேல் வளைந்திருந்தால், ஏதேனும் மருத்துவப் பிரச்சனைகள் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
மருத்துவ சோதனையும் சிகிச்சையும் எப்போது தேவைப்படும்? (Curved Penises that require medical evaluation)
உடற்கூறில் உள்ள வேறுபாட்டினாலும் ஆண்குறி வளைவு இருக்கலாம் என்றாலும், சிலசமயம் பெய்ரோனி நோய் எனப்படும் பிரச்சனையாலும் ஒரு சிலருக்கு ஆண்குறி வளைந்திருக்கலாம். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆண்குறியில் வடுத் திசுக்கள் வளர்ந்திருக்கும்.
சிலசமயம், குழந்தைகள் பிறக்கும்போதே கார்டி எனப்படும் ஆண்குறி வளைவு நோய் இருக்கும், இவர்களுக்கு ஆண்குறி விறைக்கும்போது வழக்கத்திற்கு மாறாக வளைந்திருக்கும்.
ஆண்குறி அளவுக்கு அதிகமாக இடது புறம் அல்லது வலது புறம் வளைந்திருந்தால், விறைக்கும்போது வலி இருந்தால் சிறுநீரகவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்