Home உறவு-காதல் வாழ்க்கை துணையை தெரிவு செய்வதில் குழப்பமா? இதப்படிங்க முதல்ல

வாழ்க்கை துணையை தெரிவு செய்வதில் குழப்பமா? இதப்படிங்க முதல்ல

29

நம் வாழ்வில் மிக முக்கியமான ஒரு தருணம் வாழ்க்கை துணையை தெரிவு செய்வது.
இதில் சற்றும் நாம் நமது கவனத்தை சிதறவிட்டால், பிறகு வாழ்வே இருள்மயமாகிவிடும் என்பது உறுதி.

பொதுவாக வாழ்க்கை துணையை தெரிவு செய்வதில் பெண்களும் ஆண்களும் பல்வேறு நிபந்தனைகளை தங்களுக்குள் வரையறை செய்து கொள்வர்.

ஆனால் துணையை தெரிவு செய்ய சிறந்த 7 யோசனைகள் உள்ளது. அவற்றை மனதில் கொண்டலே நம் வாழ்வு ஒளிமயமாகும்.

நட்பாக இருக்கணும்

நீங்கள் எளிதாக பேச அல்லது தொடர்புகொள்ளக் கூடியவரை தெரிவு செய்வது மிகவும் முக்கியம்.

நண்பர்களை போல் வாழ்க்கை துணை இருந்தால் மட்டுமே, அவர்களுடன் இணைந்து எந்த ஒரு செயலையும் மகிழ்ச்சியுடனும் விருப்பத்துடனும் செய்யமுடியும்.

ஒரே மாதிரியான விருப்பங்கள்

நீங்கள் ஒருவருடன் இணைந்து வாழ முடிவெடுக்கும் போது, நீங்கள் இருவரும் விரும்பும் விடயங்களை உற்று நோக்குங்கள்.

உதாரணமாக உங்களுக்கு திரைப்படங்களைப் பார்ப்பது பிடிக்குமென்றால், திரைப்படங்களை விரும்புபவர்களையே துணையாக்கி கொள்ள விரும்புவீர்கள்.

துணையின் புத்திசாலித்தனம்

உங்கள் துணையின் திறமையை ஒப்பிடும்போது நீங்கள் சற்று பின்தங்குபவராக இருப்பது உங்கள் மணவாழ்க்கையில் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.

நீங்கள் இருவரும் நேருக்கு நேராகப் பார்த்து ஒவ்வொரு விடயத்தையும் எவ்வாறு தீர்மானிப்பது மற்றும் செய்வது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

தராதரம் தேவை

உங்கள் துணையைத் தேடும் போது, அவர்களின் குடும்பத் தரங்களை பார்க்க வேண்டியது அவசியம்.

அது உங்கள் குடும்ப மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு சற்று குறைவாக இருப்பினும், சற்றும் பொருந்தாத ஒருவரை தெரிவு செய்வதை தவிருங்கள்.

பரஸ்பர மரியாதை

உங்களது யோசனைகளையும், உங்களையும் மதிக்கும் ஒருவர் தான் நல்ல வாழ்க்கை துணையாக இருக்க முடியும்.

ஏனெனில் இருவருக்குமிடையேயான மரியாதை மிக முக்கியம்.

நம்பிக்கை வேண்டும்

இன்றைய கால கட்டத்தில், நீங்கள் நம்பத்தகுந்த ஒருவரை தெரிவு செய்வது மிகமிக அவசியம்.

நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நம்பாவிடில், திருமண வாழ்வு விவாகரத்தில் தான் முடியும்.

ஒன்றாக நேரத்தை செலவிடுங்கள்

ஒரே மாதிரியான விருப்பங்களை கொண்டிருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் உங்கள் துணை உங்களுக்காக தேவையான நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிடுவதுவதும் முக்கியம்.

ஆகையால் நேரத்தை செலவிட சற்றும் சலிப்பை காட்டாதீர்கள்.