பொது பாலியல் தகவல்:1. நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.
2. புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது,
3. மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும்.
4. கொள்ளு பயறு அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம்.
5. புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.
6. பீட்ருட்டை உணவில் அதிகம் சேர்த்தல் இரத்த போக்கினால் ஏற்படும் இழப்பு சமன் செய்யப்படும்.
7. வேப்பமரப் பட்டை- பூ- வேர்- காய்- பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்.
8. உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.
9. பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்!