Home பாலியல் பெண்கள் உள்ளாடை அணியத் தொடங்கவேண்டிய வயது என்ன?

பெண்கள் உள்ளாடை அணியத் தொடங்கவேண்டிய வயது என்ன?

256

சமீபமாக ஒரு துணிக்கடையில், காலேஜ் பெண்கள் இருவர், உள்ளாடைகள் வாங்க வந்திருந்தார்கள். அவர்கள் தேர்வு செய்த ப்ரா, ஜட்டி இரண்டுமே செயற்கை இழை துணி வகையைச் சேர்ந்தது. அதாவது சின்தெடிக் வகைத் துணிகள்.

கலர் கலராக பார்க்க மிகவும் அழகாக இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதனால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பார்கள்? என்பதே என்னுடைய கவலையாக இருந்தது. தனியாக அவர்களிடம் பேசிப் பார்த்தேன். கண்ட பலன்? சுட்டெரிக்கும் பார்வையை வீசிவிட்டு பில் தொகையை செலுத்தச் சென்று விட்டார்கள்.

அதன் விளைவே இந்தக் கட்டுரை.

தவழும் வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஜட்டி போடத் தொடங்குகிறோம். காரணம், பேஷன் மட்டும் அல்ல. பிறப்பு உறுப்புக்களில் கை வைக்கும் பழக்கம் குறையும். மேலும் தரையில் உள்ள பாக்டீரியாக்கள் பிறப்பு உறுப்புக்குள் சென்று தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும் .

பள்ளி, காலேஜ் செல்லும் பெண்கள், காலை முதல் மாலை வரை ஒரே ஜட்டியைத்தான் அணிய வேண்டி வருகிறது. இந்த வயதில் பெண்களுக்கு…

1.பிறப்பு உறுப்பிலிருந்து வெளியேறும் கசிவானது, தோலின் மேல் பட்டு, ‘fungus infection of external genetalia ‘ என்கிற தொற்று உண்டாகிறது

2. சிறுநீர் கழிக்கும் பொழுதோ, சுத்தம் செய்து கொள்ளும் பொழுதோ, சருமத்தில் படும் நீரானது பிறப்பு உறுப்பு ரோமங்களில் தங்கி, நமச்சலைக் கொடுக்கிறது.

3. மாதவிடாய் காலங்களில், உபயோகப்படுத்தப்படும் நாப்கின், சின்தெடிக் ஷீட்டால் செய்யப்பட்டது. அது போன்ற நாட்களில், இரண்டாவதாக சிந்தெடிக் ஜட்டி உபயோகப்படுத்துதல் எந்த வகையில் நியாயம்?

பெண்களுக்கு, சிறுநீர் துவாரம், பிறப்புறுப்பு, மலத்துவாரம் மூன்றுமே அருகருகே இருப்பதால், ஒன்றில் பிரச்னை வந்தாலும், தொற்று விரைவாகப் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

பருத்தி ஆடை ஒன்றால் மட்டுமே ஈரத்தை உறிஞ்சிக்கொள்ள முடியும். நம் சருமத்தில் ஏற்படும் ஈரப்பசையைத் தவிர்த்து, உலர்ந்த சருமமாக இருந்தால்தான் அனாவசிய தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அணுகாது. முக்கியமாக பெண்கள் ஜட்டி அணிவதைத் தவிர்த்து, ‘பேன்ட்டீஸ்’ போன்ற கால் வைத்த உள்ளாடைகளை அணிவது நல்லது. ஏனென்றால், ஜட்டியினால், தொடை இடுக்குகளில் உராய்வு உண்டாகி, ‘டெர்மடைஸ்’ என்னும் தோல் வியாதி உண்டாவதால், தோலின் நிறம் கறுப்படைவதோடு, துர்நாற்றமும் ஏற்படுகிறது.

இப்பொழுது ப்ரா விஷயத்திற்கு வருவோம். அநேகப் பெண்கள், மார்பகங்கள், சிக்கெனத் தெரிய வேண்டும் என்பதற்காக மார்பகங்களைப் பிடிக்கும்படியான ப்ராவை அணிகிறார்கள். இவ்வாறு அணிவதால், மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் குறைகிறது. இதன் விளைவாக மார்பகங்களில் வீக்கமும், வலியும் உண்டாகிறது. சிலர் பாடெட் ப்ராவையும் அணிகிறார்கள். இந்த அழகில், சிந்தெடிக் ப்ராவையும் அணிந்தால்…? இனி வெயில் நாட்களில், வியர்வையும் அதிகமாக இருக்கும். வியர்க்குருவும் அதிகமாக இருக்கும்.

ஆகையால், பெண்களே, பருத்தியினால் ஆன உள்ளாடைகளையே அணிந்து கொள்ளுங்கள். சாதாரண அளவைவிட ஒரு இன்ச் கூடுதலான அளவுள்ள உள்ளாடைகளையே அணியுங்கள். சருமத்தை உலர்வாக வைத்துக்கொண்டு, சரும வியாதிகளுக்கு பை சொல்லி விடுங்கள்.

இதைப் படிக்கும் பெண்கள், தங்கள் அறிந்துகொள்வதோடு நின்றுவிடாமல், பிறருக்குத் தெரியப்படுத்தவும் வேண்டும்.