Home பெண்கள் உணவு உடல் நண்பர்களே! ஒயின் குடிக்கும் போது இதெல்லாம் முயற்சித்துப் பாருங்க…!

நண்பர்களே! ஒயின் குடிக்கும் போது இதெல்லாம் முயற்சித்துப் பாருங்க…!

70

ஒயின் குடிப்பதென்பது ஒரு கலை. அதனை புரிந்து செயல்படுத்த சிறிது காலம் எடுக்கும். ஆனால் எப்போதாவது ஒயின் குடிப்பவர்கள் அதனை பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள விரும்பாமல், எப்படி அதனை சுவைக்க வேண்டும் என்பதை பற்றி மட்டும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். ஆனால் இந்த வழிமுறைகள் எல்லாம் கம்பு சுத்தும் வேலை கிடையாது. அதனால் புதிதாக குடிப்பவர்கள் கூட அதனை சுலபமாக கற்றுக்கொள்ளலாம்.

இருப்பினும் மற்றவர்கள் சொல்வதை விட உங்களுக்கு தனிப்பட்டு எது பிடிக்கும் என்பது மிகவும் முக்கியம்.
உங்கள் சிக்கன் உணவோடு வெண்ணிற ஒயின் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. யாரோ சொன்னார்கள் என்ற காரணத்திற்காக உங்களுக்கு பிடிக்காத ஒன்றை குடிக்காதீர்கள்.

ஒயின் குடிக்கும் கலை என்பது நுண்ணியல்புடையது. மேலும் அது காலப்போக்கில் கற்றுக் கொள்ளப்பட வேண்டியது. ஆனால் டேட்டிங்கிற்கு டின்னர் செல்லும் போது நீங்கள் கடைப்பிடிக்க கூடிய சில எளிய டிப்ஸ்களைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா?

ஒயின் பானத்தின் தரத்தை குறிக்க அதன் நிறம் பெரிதும் உதவும். ரெட் ஒயின் பானத்தின் வயது ஏற ஏற அதன் நிறம் வெளிறி போகும். வயதான ரெட் ஒயினின் ருசி தான் அதிகமாக இருக்கும். இதுவே வெண்ணிற ஒயின் என்றால் வயது அதிகரிக்க அதிகரிக்க கெட்டுப் போய்விடும்.

அடுத்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, எப்படி உங்கள் காதலியின் மனதில் இந்த டேட்டை ஆழமாக பதிய வைப்பது என்பதை பற்றி தான். எப்போதும் ஒயின் கோப்பையை அதன் தண்டை பிடித்து தூக்கவும். உங்கள் கைகளின் வெப்பம் ஒயின் பானத்தின் சுவையை மாற்றக் கூடும். அதனால் ஒயின் சுவையை பற்றி நன்கு அறிந்தவர்கள் கோப்பையின் மேல் பகுதியை பிடித்து குடிக்க மாட்டார்கள். ஒயின் குடிப்பதை பற்றி தெரிந்து கொள்ளும் போது இதனையும் மறந்து விடாதீர்கள்.

ஒயின் பானத்தை கோப்பையில் ஊற்றுவதற்கு முன்பாக, கோப்பையியை ஒரு முறை நன்றாக உதறவும். அதனால் அதில் ஒட்டியிருக்கும் இதர சுவை அல்லது வாசனை நீங்கும். உங்கள் ஒயின் பானத்தை முகந்து பார்த்தால், ஒயின் பானத்தின் சுவையை உங்கள் சுவையரும்புகள் உங்களுக்குள் புகுத்தும்.

ஒயின் பானத்தை இரண்டு வகையாக முகந்து பார்க்கலாம். ஒரு முறை வேகமாக முகந்து பார்த்து விட்டு, அது ஏற்படுத்திய ஈர்ப்பை எண்ணி ஆழ்ந்து நினைத்திடுங்கள். பின் அந்த வாசனை உங்களை ஈர்த்து அளவுக்கு அதிகமாக குடிக்க வைப்பதற்கு முன்பாக அதனை நன்றாக நீண்ட நேரம் முகந்து பாருங்கள். இல்லையென்றால் ஒரு முறை ஆழமாக முகந்து பாருங்கள். பொதுவாக இது ஒருவரின் தனிப்பட்ட விருப்புகளை பொறுத்தது. அதனால் நீங்கள் இரண்டையுமே முயற்சி செய்து பார்த்து உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்பதை முடிவு செய்யுங்கள். இருப்பினும் ஆழமாக முகந்து பார்த்து, உங்கள் உணர்வுகள் உட்கொள்வதற்கு முன்னாள், எந்த ஒரு புது வகை ஒயின் பானத்தையும் குடிக்காதீர்கள்.

சுவையை அறிந்திட, கொஞ்சம் ஒயினை குடிக்கும் போது, அது உங்கள் வாயில் முழுவதுமாக ஓடுவதற்கு முன்பு, உங்கள் சுவையரும்புகள் அதனை ருசித்திட விடுங்கள். அனைத்து சுவையரும்புகள் மீதும் அது பட வேண்டும். நாவின் அடியில் இருக்கும் சுவையரும்பும் இதில் அடக்கம்.

நீங்கள் குடிக்க ஆரம்பிக்கும் போது, முதலில் ஏற்படும் உணர்வு தான் உங்கள் சுவையரும்பை தட்டி எழுப்பும். பின் அது தொடரும். இப்போது வாயில் இருக்கும் ஒயினை மெதுவாக சுழற்றி சற்று காற்றை உள்ளே விடவம். இப்போது நீங்கள் பருகும் ஒயினை கவனியுங்கள் உதாரணத்திற்கு அது மென்மையாகவும் அடர்த்தியாகவும் உள்ளதா அல்லது மிதமாகவும் மென்மையாகவும் உள்ளதா? அடுத்த வாய் பருகும் முன், சற்று அமைதியுற்று அதன் சுவை எப்படி மாறுகிறது என்பதை உணருங்கள். அந்த சுவை எவ்வளவு நேரம் உங்கள் வாயில்
நீடிக்கிறது என்பதை உணர்ந்து இந்த அனுபவம் இனிமையாக உள்ளதா என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒயின் குடிப்பது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட அனுபவம் என்பதை எப்போதும் மறக்காதீர்கள். மேலும் அது ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பதையும் மறந்து விடாதீர்கள்.