Home ஆண்கள் ஆண்கள் இன்பமடையாமல் போக சில முக்கிய காரணம்

ஆண்கள் இன்பமடையாமல் போக சில முக்கிய காரணம்

185

ஆண்மை பெருக்க:நரம்புகள் பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையை ஆண்மைக்குறைவு என்கிறோம்.

நரம்புகள் பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையை ஆண்மைக்குறைவு என்கிறோம். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

1. நல்ல குணமும், நலமும் மனமும் இல்லாமல் மனதில் அமைதி இல்லாதவர்கள்.
2. நோய்வாய்ப்பட்டதாலோ விபத்தாலோ தண்டுவடம் பழுதடைந்து விடுதல்.
3. குடி, போதைப் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் வழக்கம்.
4. காரம், புளிப்பு முதலியவற்றை உணவில் மிக அதிக அளவு சேர்த்துக் கொள்ளுதல்.
5. இரவில் தேவைக்கும் அதிகமாக உணவை உட்கொள்வது.
6. விஷக் காய்ச்சல் அல்லது அம்மை போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அதனால் சில பக்க விளைவாகவும் நரம்புத் தளச்சி ஏற்படலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கீழேயுள்ள அறிகுறிகளைக் கொண்டு நரம்புத் தளர்ச்சியை அறிந்து கொள்ளலாம்.

அ. தாம்பத்திய உறவின்போது அந்த பகுதி விரைவில் துவண்டு விடுதல்.
ஆ. விரைப்பு இருந்த போதிலும் விந்து வெளியேறி விடுவது.
இ. விந்து வெளியேறாமலேயே இருப்பது.

இந்த அறிகுறிகள் எல்லாம் நரம்புத் தளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள். ஆனாலும் இதை மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியும். இதுவொரு குறைபாடுதான். நோய் அல்ல. ஆகவே, இதனை எளிய மூலிகை மருந்துகள் மூலம் சரி செய்ய முடியும். நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

முதலில் நரம்புத் தளர்ச்சியினால் தனது வாழ்வே அஸ்தமனமாகிவிட்டது என்று தவறாகப் புலம்பக் கூடாது. குடிப்பழக்கம் இருந்தால் அதனைக் கைவிட வேண்டும். இவர்கள் வெந்நீர் குளியல் செய்யலாம். ஒரே வேலை வேலை என்று இருக்காமல் குடும்பத்தாருடன் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். மனதை வேலைகளில் இருந்து விலக்கி வைத்து குடும்பம், மனைவி, மக்கள் என்று ஈடுபடுத்தவும் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மனதளவிலான நரம்புத்தளர்ச்சி நீங்கி புத்துணர்வு பெறலாம்.