Home பாலியல் பாத காமம் என்றால் என்ன? (What is Foot Fetishism?)

பாத காமம் என்றால் என்ன? (What is Foot Fetishism?)

112

பாத காமம் என்றால் என்ன? (What is Foot Fetishism?)

அடையாளக் காமம் (ஃபெட்டிஷிசம்) என்பது வழக்கத்திற்கு மாறான பாலியல் கோளாறாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரை, ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது தீவிரமான பாலியல் ஈர்ப்பும் பாலியல் கிளர்ச்சியூட்டும் கற்பனைகளும் இருக்கும்.

பாத காமம் (FF), பாத ஈர்ப்பு, பாத மோகம் அல்லது போடோஃபிலியா எனப்படும் இந்தப் பிரச்சனை முன்பு ‘பாலியல் வக்கிரம்’ எனக் கருதப்பட்டது. பாத காமம் என்பது பாதம் அல்லது காலணிகள் மீது ஒருவருக்கு தீவிரமான காம ஈர்ப்பு இருப்பதாகும். அடையாளக் காமத்தின் மிகப் பொதுவான வகை பாத காமம் எனப்படும் இந்தப் பிரச்சனையே ஆகும். பெரும்பாலும் பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் உள்ளது.

இந்தக் கோளாறுள்ள நபருக்கு பாதம் மற்றும் விரல்களின் வடிவம், அளவு மீது மிகுந்த காம ஈர்ப்பு இருக்கும். உதாரணமாக நீண்ட அல்லது குட்டையான கால் விரல்கள், பாலிஷ் போட்ட கால்விரல் நகங்கள், அதிக வளைவுள்ள பாதம், உள்ளங்கால் போன்றவற்றின் மீது இவர்களுக்கு அதிக ஈர்ப்பு இருக்கும்.

இவற்றின் மீதும் ஈர்ப்பு இருக்கலாம் (The attraction may also be towards):

காலில் அணியும் ஆபரணங்கள் (மெட்டி, காலில் அணியும் மோதிரங்கள், கொலுசுகள், பிரேஸ்லெட் போன்றவை)
ஆடை அணிந்திருக்கும் விதம் (வெறும் பாதம், சேன்டல்ஸ், ஃபிளிப் ஃபிளாப், ஹை ஹீல்ஸ் போன்றவை)
பராமரிக்கும் செயல்கள் (கால் விரல் பராமரிப்பு அல்லது மசாஜ் செய்தல்)
துர்நாற்றம் மற்றும் உணரும் செயல்கள் (உதாரணமாக, பாதத்தை முகர்ந்து பார்த்தல், நக்குதல், முத்தமிடுதல், கூச்சமூட்டுதல், கடித்தல் போன்றவை)
பாத காமப் பிரச்சனை உள்ளவர்களில் பெரும்பாலான ஆண்களுக்கு, பெண்களின் ஷூக்கள் மீது அதிக ஈர்ப்பு இருக்கும், அவற்றைப் பார்த்தே அவர்கள் பாலியல் கிளர்ச்சி அடைவார்கள் (குறிப்பாக ஹை ஹீல்ஸ் ஷூக்கள்), சிலர் தங்கள் பாலியல் கற்பனைகளிலும் ஃபோர்பிளே செய்யும்போதும் ஹை ஹீல்ஸ் ஷூக்களையும் பயன்படுத்துவார்கள்.

எனினும், பாத காமம் என்பது கெடுதலற்றது, இதுவும் காலின் மீதும் மார்பகங்கள் மீதும் ஆண்களுக்கு இருக்கும் ஈர்ப்பைப் போன்றதே தான்.

இது சாதாரணம் தானா? (Is it normal?)

இது இயல்புக்கு மாறான நடத்தையாகத் தெரிந்தாலும், இது சாதாரணமான நடத்தை தான்.

இதற்கான காரணங்கள் என்ன? (What are the Causes?)

காரணம் என்ன என்று தெளிவாகக் கண்டறியப்படவில்லை. இருப்பினும், பின்வருபவற்றால் இந்த நடத்தை ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்களும் உளவியல் நிபுணர்களும் கருதுகின்றனர்:

ஆய்வு செய்தவர்களின் கருத்துப்படி, இந்த விதமான பாலியல் இன்பங்கள், கிளர்ச்சிகள் அவர்களின் பருமடையும் காலத்தில் தொடங்கியிருக்கும். அந்த சமயத்தில் அவர்களின் ஹார்மோன்களின் அளவு மிக அதிகமாக இருந்திருக்கும், இதனால் பல்வேறு பொருள்கள் மீதும் அவர்கள் ஈர்ப்படைந்து அவற்றைக் கொண்டு கிளர்ச்சி அடைவதுண்டு. அது போன்றே சிலருக்கு பாதத்தின் மீதும் பாலியல் ஈர்ப்பு அதிகரித்திருக்கலாம்.
நரம்பியல் நிபுணர் விளையனூர் சு. ராமச்சந்திரன் என்பவர், மூளையின் மேற்பரப்பில் ஒன்றுக்கொன்று அருகருகில் அமைந்துள்ள பாதத்திர்கான உணர்ச்சிப் பகுதிக்கும் இனப்பெருக்க உருப்புக்கான உணர்ச்சிப் பகுதிக்கும் இடையே நடக்கும் வழக்கத்திற்கு மாறான தற்செயலான தகவல்பரிமாற்றத்தின் காரணமாகவே இந்த நடத்தை உருவாகிறது எனக் கருதுகிறார்.
உளவியல் நிபுணர்கள், ஒருவரின் சிறு வயதில் பிறரின் பாதத்தால் மிதிபட்டிருந்தால் அல்லது கூச்சமூட்டப்பட்டிருந்தால் அது அவரது மனதில் ஆழப் பதிந்து வாழ்நாள் முழுதும் இப்படிப்பட்ட நடத்தையாக வெளிப்படலாம். எதிர்காலத்தில் அவர்கள் பாத காம நடத்தை உள்ளவர்களாகலாம் என்கின்றனர்.
பாத காமப் பிரச்சனை உள்ளவர்கள் என்ன செய்வார்கள்? (What do Foot Fetishists do?)

சில நிபுணர்கள், பாத காமப் பிரச்சனை உள்ளவர்களை அவர்களின் நடவடிக்கைகளின் அடிப்படையில் இரண்டு வகையினராகப் பிரித்துள்ளனர்:

அழகியல் நடத்தை உள்ளவர்: இணையரின் பாதத்தை முத்தமிடுவார்கள், நக்குவார்கள், தடவிக் கொடுப்பார்கள், கொஞ்சுவார்கள்.
நேரடி பாலியல் நடத்தை உள்ளவர்கள்: பாலியல் உந்துதல் உள்ளவர்கள் தங்கள் இனப்பெருக்க உறுப்பை தங்கள் இணையரின் பாதத்தில் தேய்ப்பார்கள், சிலசயம் பாலுறவின் உச்சக்கட்டத்தை பாதத்தின் மீதே நிகழச் செய்வார்கள்!
இதை எப்படிச் சமாளிப்பது? (How is it managed?)

பாத காமப் பிரச்சனை உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் பாலியல் வாழ்க்கை இயல்பாகவே இருப்பதால் அதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை. அவர்களின் இணையர்களுக்கு இது பிடிக்காவிட்டால் சிகிச்சை தேவைப்படலாம்.
அறிவாற்றல் சார்ந்த நடத்தைக்கான சிகிச்சை (CBT): பாத காம நடத்தையை ஓரளவு சரிசெய்ய இந்த சிகிச்சை பலனளிக்கிறது.
குறிப்பு: பாத காமப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, அதன் காரணமாகவே பால்வினை நோய்த்தொற்றுகள் வர வாய்ப்பில்லை. எனினும், பாதத்தில் வியர்க்கும் பிரச்சனை (அத்தலேட் ஃபுட்) வர சிறிது வாய்ப்புள்ளது.