இன்றைய காலத்தில் நன்கு குனிந்து, நிமிர்ந்து வேலை செய்பவர்களை விட, நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் தான் அதிகம். அதிலும் சாப்ட்வேர் அலுவலகங்கள் மற்றும் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் உட்கார்ந்து கொண்டே அனைத்து வேலைகளையும் முடித்துவிடுவார்கள். அவ்வாறு உட்கார்ந்து கொண்டே இருந்தால், உடலில் இதுவரை வராத நோய் கூட வந்துவிடும். உட்கார்வதால் உடல் ரிலாக்ஸ் ஆகும் தான், அதுவே நீண்ட நேரம் உட்கார்ந்தால், உடல் பாதிப்பு தான் அடையும். அதிலும் தொடர்ந்து 8-10 மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தால், சொல்லவே வேண்டாம். இப்போது அவ்வாறு நீண்ட நேரம் உட்கார்ந்தால் என்னென்ன பிரச்சனைகள் வருகிறதென்று பார்ப்போமா!!!
* முதுகு வலி– உட்கார்ந்து கொண்டே வேலை செய்யும் நிறைய பேர் முதுகு வலிக்கிறது என்று புலம்புவதை கேட்டிருப்பீர்கள். ஏனெனில், உடலில் உள்ள தசைகள் எந்த ஒரு அசைவும் இல்லாமல், நீண்ட நேரம் உட்கார்வதால் ஏற்படுகிறது. அதுவே நீண்ட நாட்கள் தொடர்ந்து பல மணிநேரம் உட்கார்ந்தால், ஒட்டுமொத்த முதுகும் வலி ஏற்பட்டு, பின் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே எப்போதும் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காராமல், உடலுக்கு ஏதேனும் அசைவை கொடுங்கள்.
* வளர்சிதை மாற்றப் பணிகள் பாதிக்கும்– தற்போது மேற்கொண்ட ஒரு ஆய்வில் நீண்ட நேரம் உட்கார்ந்தால், உடலின் வளர்ச்சிதை மாற்ற பணிகள் பாதிக்கப்படும் என்று கண்டுபிடித்துள்ளது. மேலும் அவ்வாறு பாதிக்கப்படுவதால், உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலில் உள்ள லிப்போபுரோட்டீன் அளவு குறைந்துவிடும். இந்த கொலஸ்ட்ரால் உடலுக்கு மிகவும் நல்லது. அது குறைந்தால், உடலில் ஏற்படும் பிரச்சனைகள் அதிகமாகிவிடும்.
* நீரிழிவு– நீண்ட நேரம் உட்கார்வதால், உடலில் உள்ள இன்சுலின் அளவு குறைந்துவிடும். இத்தகைய பிரச்சனை ஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிகம் ஏற்படுகிறது. ஆகவே பெண்கள் அலுவலக நேரங்களை திவிர மற்ற நேரங்களில் உட்கார்தை தவிர்த்து, மற்ற வீட்டு வேலைகளை செய்வது நல்லது. மேலும் அலுவலகத்தில் கூட தொடர்ச்சியாக நீண்ட நேரம் உட்கார்வதை தவிர்ப்பது நல்லது.
* கழுத்து வலி– சில சமயங்களில் கழத்து வலி ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இல்லையெனில் அதனால் முதுகெலும்புகளில் அழற்சி அல்லது வீக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கழுத்தில் முதுகெழும்பின் இணைப்பு இருப்பதால், எளிதில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
* விரைவில் மரணம்– சமீபத்திய ஆய்வு ஒன்றில் நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்பவர்களுக்கு விரைவில் மரணம் ஏற்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் உடலில் உள்ள இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகவும், நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவும் மாறிவிடும். இதனால் வேகமாக இதயம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு மற்றும் பல இதய நோய்கள் வரும் வாய்ப்பும் உள்ளது.
ஆகவே நீண்ட நேரம் உட்கார்வதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. இதனால் உடலும் ஆரோக்கியமாக இருப்பதோடு, நீண்ட நாட்கள் உயிரோடு வாழலாம்.