Home பெண்கள் உடல் கட்டுப்பாடு இயற்கையான முறையில் உடல் எடையை எப்படி குறைக்கலாம்

இயற்கையான முறையில் உடல் எடையை எப்படி குறைக்கலாம்

33

capture1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ள அதிகப்படியான சதை குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும் பொழுது, உடல் எடை படிப்படியாக குறையும்.

5. இது தவிர பப்பாளிக்காயை சமைத்து சாப்பிடலாம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.

6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை பாதியாக குறைத்து விடலாம்.

7. அன்றாடம் குடிக்கும் தேநீரில்(டீ) பாலிற்கு பதிலாக சிறிது எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.

8. வாரத்தில் 4 நாட்கள் வாழைத்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையை விரைவில் குறைக்கும் சக்தி கொண்டது.

9. இவற்றுடன் காலையில் யோகா, நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

10. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடான 1 கப் நீரில் 1 ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் 1 மாதத்தில் உடல் எடை குறைந்திருப்பதை உணரலாம்.