Home உறவு-காதல் வார இறுதி நாட்களை காதல் மிகுந்ததாக மாற்றுவது எப்படி?

வார இறுதி நாட்களை காதல் மிகுந்ததாக மாற்றுவது எப்படி?

28

இறுதிக்காக காத்திருந்து ஓய்வு எடுப்பது என்பது வழக்கமான ஒன்று. மேலும், வார இறுதியில் ஒரேமாதிரியாக வீட்டில் ஓய்வு எடுப்பதை விட வெளியே

எங்காவது சென்று சாப்பிட்டு, தங்கி வருவது போல் ஒரு திட்டத்தை தீட்டி, சுகமான ஒரு காதல் வாரமாக மாற்றலாம்.
இவ்வாறு திட்டம் செய்யும் போது, இருவருக்கிடையில் காதல் அதிகரிப்பதோடு, வேலைப் பளுவினால் ஏற்படும் மன அழுத்தமும் குறைந்து, மனம் அமைதியாக இருக்கும். மேலும் இந்த முறை சற்று வித்தியாசமான அனுபவத்தையும் தரும். அதற்கு எந்த மாதிரியான திட்டத்தை தீட்டினால் நன்றாக இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறுவதைப் படித்து பாருங்கள்.
* விடுமுறை அன்று தொலைவில் எங்கோ செல்வதை விட, தங்கியிருக்கும் ஊருக்கு கொஞ்சம் அருகில் இருக்கும் இடத்திற்கு சென்று ஓய்வு எடுக்கலாம். எடுத்துக்காட்டாக, பார்ம் ஹவுஸ் அல்லது ரெசார்ட் போன்ற இடங்களுக்கு சென்று, சற்று வித்தியாசமாக ஓய்வு எடுக்கலாம். * அவ்வாறு செல்லும் போது பிடித்தமான உடை அணிந்து கொண்டு, விருப்பமான இசை கேட்டு அனுபவிக்க இசை குறுந்தகடுகள், பயண தின்பண்டங்கள் போன்ற பிடித்த விஷயங்களை எடுத்து செல்லவும்.
* செல்லும் போது மறக்காமல் தேவையான அனைத்து பொருளையும் எடுத்து செல்லவும். அவ்வாறு மறக்காமல் எடுத்துச் செல்வதால், செல்லும் இடங்களில் பொருள் இல்லையே என்று டென்சன் அடையாமல், அந்த நாளில் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்கலாம்.
* இப்படி செய்வது அத்தனை ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த சிறு விஷயங்கள் தான், சிறு வயதில் அனுபவித்த நினைவுகளை விட, மிகவும் சூப்பராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
* எப்படியெனில் ஆங்காங்கே வழியில் காரை நிறுத்தி சிற்றுண்டி சாப்பிடுவது, படம் பிடித்து கொள்வது போன்ற விஷயங்கள் புத்துணர்வை ஏற்படுத்தும். சாந்தத்திற்கு முக்கிய முன்னுரிமை கொடுத்து ஒருவரை ஒருவர் காதல் செய்து அனுபவியுங்கள்.
* தங்க செல்லும் இடத்திற்கு அருகில் உள்ள ஆற்றின் ஓரம் நடந்து செல்லுதல், இயற்கையை ரசிப்பது, பறவைகளை கண்டு மகிழ்வது, கை கோர்த்து தெருவில் நடப்பது என அன்றைய தினத்தை அனுபவிக்கவும். இல்லையெனில் மனதை அமைதிப்படுத்த, படுக்கை அறையில் இருந்து ஜன்னல் ஓரம் உட்கார்ந்து இயற்கையின் அழகை ரசிக்கவும்.
* உறவின் பிணைப்பில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவும். மேலும் உறவை தொடர்ந்த ஆரம்ப நாட்களை பற்றி பேசி உங்களை உணர்ந்து கொள்ளவும். பொறுப்புகள், நிதி விவகாரங்கள், முந்தைய சண்டை போன்றவற்றை பற்றி பேச வேண்டாம்.