Home பாலியல் திருமணத்திற்கு பின்பும் சுய இன்பம் காண்பது சரியா? தவறா? – ஆய்வில் பகீர் தகவல்…!

திருமணத்திற்கு பின்பும் சுய இன்பம் காண்பது சரியா? தவறா? – ஆய்வில் பகீர் தகவல்…!

31

வாழ்க்கையில் சுய இன்பம் என்பது ஒரு சாதாரண செக்ஸ் விஷயம் தான் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதனால் திருமண வாழ்வு பெரிதும் பாதிக்கப்படும் என பலர் அஞ்சுகின்றனர்.

ஆணாக இருந்தாலும் சரி , பெண்களாக இருந்தாலும் சரி வாழ்க்கையில் ஒருகட்டத்தில் சுய இன்பம் காண்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் சிலர் இந்த விஷயத்தில் கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் காட்டுவதாக தெரியவந்துள்ளது. மனித வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப்போலத்தான் இதுவும் என்றாலும் இது சில பிரச்சனைகளை ஏற்படுத்துவதும் உண்மை தான்.

பெண்களை விட இந்த விஷயத்தில் பெரிதும் ஆர்வம் காட்டுவது அதிகம் ஆண்கள் தான் என்பதும், அதனால் அதிகம் பாதிக்கப்படுவதும் ஆண்கள் தான் என்பதும் உண்மையான விஷயம் என்கிறார்கள் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தவிர, இது குறித்த முழுமையாக அவர்கள் தெரிந்து கொள்வதும் அவசியம் என்கிறார்கள்.

இதுகுறித்து ஆண்டிராலஜி மருத்துவர் ஒருவர் கூறுயது:
சுய இன்பம் எல்லாரும் நினைக்கும் அளவுக்கு மிகப்பெரிய தவறான விஷயம் இல்லை. இருப்பினும் என்னிடம் ஆலோசனைக்காக வரும் எல்லாரின் கேள்வியும், எந்த அளவுக்கு மேல் இது ஆபத்தானது என பொதுவாக கேட்கின்றனர்.

இதற்காக அமெரிக்காவில் ஆய்வு ஒன்றே நடத்தப்பட்டது. அதன்படி அளவுக்கு அதிகமாக இதில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே பிரச்சனை ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

தவிர, சுமார் 20 சதவீதம் ஆண்கள் வாரத்துக்கு 2 அல்லது 3 முறைக்கு மேல் இதில் ஈடுகின்றனர். 20 சதவீதத்துக்கும்
குறைவான ஆண்கள் வாரத்துக்கு 4 முறைக்கு மேல் இதில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

பொதுவாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் எதுவும் அளவாக இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் அதற்கு அடிமையாவது தான் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக மாறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.