Home உறவு-காதல் திருமண நாளை உற்சாகமாக கொண்டாட என்ன செய்யலாம்?

திருமண நாளை உற்சாகமாக கொண்டாட என்ன செய்யலாம்?

32

திருமணநாள் என்பது ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கானது மட்டுமல்ல. ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பைக் காட்டுவதற்கு கிடைக்கும் அருமையான வாய்ப்பு.

திருமண நாளை உற்சாகமாக கொண்டாட ஒவ்வொரு தம்பதியும் ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டுவிடுகிறார்கள். கணவரும், மனைவியும் ஒருவரை ஒருவர் எப்படி எல்லாம் உற்சாகப்படுத்தலாம் என்று ஒரு பட்டியலே தயார்செய்து, நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்கள் வித்தியாசமான முறையில் திருமண நாளை கொண்டாட சில ஐடியாக்கள்:

திருமணநாள் என்பது ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கானது மட்டுமல்ல. ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பைக் காட்டுவதற்கு கிடைக்கும் அருமையான வாய்ப்பு அது. அதனால் அந்த நாளை, அடுத்த திருமணநாள் வரை மறக்க முடியாத நாளாக்க முயற்சி செய்யுங்கள்.

வகுப்பு

துணையுடன் அதிக நேரம் செலவழிப்பதே அந்த நாளின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும். சமையல் வகுப்பு, நடன வகுப்பு போன்றவைகளுக்கு தம்பதியர் மட்டுமே ஜோடியாக சென்று வரலாம். ஒவ்வொருவருக்கும் எந்தெந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கிறது என்பதை பட்டியலிடலாம். இருவரிடமும் என்னென்ன திறமைகள் இருக்கிறது என்பதை பற்றி தெரிந்து, அதை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான மனப்பூர்வமான முயற்சியை தொடங்கலாம்.

கடிதம்

திருமண நாள் நெருங்குவதற்கு சில வாரங்கள் இருக்கும்போதே கடிதங்கள் எழுத தொடங்கிவிடலாம். துணையிடம் உங்களை கவர்ந்த விஷயங்களை கடிதத்தில் குறிப்பிடலாம். அவர் மீது கொண்டிருக்கும் காதலை கவிதையாகவோ, உணர்வுபூர்வமான வார்த்தைகளாகவோ வெளிப்படுத்தலாம். எழுதியதை ரகசியமாக வைத்துக்கொண்டு, திருமண நாளில் துணையிடம் கொடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கலாம்.

இதயம்

தம்பதிகளின் பந்தம் என்பது இதயபூர்வமானது. அந்நாளில் சமையலில் இதய வடிவங்களை உருவாக்கலாம். இதய வடிவ ரொட்டி, பிஸ்கட் போன்றவைகளை தயாரித்து கொடுக்கலாம். இருவரும் இணைந்து சமையல் செய்யத் தொடங்கினால் சமையலறை மகிழ்ச்சி நிறைந்த இடமாக மாறிவிடும்.