குளிர் காலத்தில் ஆண்களுக்கு பிடித்தமானது என்ன என்பது பற்றி
போலாந்தின் ரோக்லா பல்கலைக்கழகம் (Wroclaw University) ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் கிடைத்த விடை பெண்கள்.
அதுவும் குளிர் காலத்தின் பெண்களின் நிர்வாண அழகைப் ‘பார்க்கவே’ ஆண்கள் விரும்புகிறார்களாம். இதற்கு இத்துறை ‘வல்லுனர்கள்’ (!*~!) கூறியுள்ள காரணம் என்ன தெரியுமா?
பொதுவாக குளிர் காலத்தில் ஆண், பெண் என பேதமின்றி அனைவரும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தான் இருப்பார்கள். இதற்கு காரணம் என்னவென்று உங்களுக்கே தெரியும். இந்த கால கட்டத்தில் பெண்களின் உடலழகைக் கண்டு ரசிக்க முடியாமல் ஆண்களின் கண்களும், மனமும் ‘வறண்டு’ போய்விடுவதால், பெண்களின் நிர்வாண அழகை ஆண்களின் மனம் நாடுகிறதாம். (பொருத்தமான விளக்கம் தான்!)
இந்த ஆய்வு எப்படி நடத்தப்பட்டது என்று உங்களுக்கு சந்தேகம் வருமே… கற்பனைகளை மூட்டை கட்டி விட்டு தொடர்ந்து படித்தால் நல்லது…
மொத்தம் 114 ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் பெண்களின் புகைப்படங்களைக் கொடுத்து 3 மாத கால இடைவெளியில் தொடர்ந்து 15 மாதங்கள் சோதனை நடத்தப்பட்டது.
ஆண்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படங்களில் கருப்பு நீச்சல் உடை அணிந்த பெண்கள், பலவித வடிவிலான மார்பகங்கள், இளம் பெண்களின் முகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இதில் இலையுதிர், குளிர் காலங்களில் நீச்சல் உடையில் உள்ள பெண்கள் மற்றும் மார்பகம் மட்டும் உள்ள புகைப்படங்களை ஆண்கள் அதிகம் விரும்புவது தெரியவந்துள்ளது. பெண்களின் முகம் மட்டும் உள்ள படங்களுக்கு அனைத்து கால நிலைகளிலும் ஒரே விதமான ஆதரவே காணப்படுகிறது.
அதாவது அனைத்து காலங்களிலும் பெண்களின் முகத்தை ஆண்கள் பார்க்க முடியும். ஆனால் குளிர் காலத்தில் பெண்களின் நிர்வாண அழகை ரசிக்கவே ஆண்கள் விரும்புகிறார்கள் என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.