இங்கு மனைவியிடம் கணவன் கேட்க விரும்பியும், கூச்சத்தால் கேட்க மறுக்கும் 3 விஷயங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
தாம்பத்தியம் என்பது இல்லறத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை தவிர்க்க முடியாத ஒன்றாக அமைகிறது. இரு உடல் இணையும் செயற்பாடாக இருப்பினும். அதற்கு முதலில் இரு மனம் இணைய வேண்டும். இல்லையேல் இல்லறத்தில் கசப்பு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
முக்கியமாக கணவன் – மனைவிக்கு எது பிடிக்கும், பிடிக்காது, அவர் எதை விரும்புகிறார், வெறுக்கிறார் என்பதை அறியாமல் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது தவறான அணுகுமுறையில் முடிந்துவிடும். இதில், விருப்பம் இருந்தும், கூச்சத்தால் மனைவியிடம் கணவன் கேட்க தயங்கும் அந்த 3 விஷயங்கள்…
விஷயம் #1 தாம்பத்திய உறவில் ஈடுபட விரும்பி, மனைவியிடம் கேட்க தயங்குவது.
காரணம்: மனைவியாக இருப்பினும் கூட, எல்லா தருணத்திலும் தாமாக துவக்க ஆண்கள் விரும்பமாட்டார்கள். ஆகவே, உறங்க செல்லும் போது, படுக்கை அறையில் உடை மாற்றும் போது, மனைவியே தானாக தன்னை விரும்பி தாம்பத்திய உறவில் ஈடுபட அழைப்பதை ஆண்கள் சற்று அதிகமாகவே விரும்புகிறார்கள். இந்த ஆசை எல்லா ஆண்கள் மத்தியிலும் இருக்கும்.
விஷயம் #2 தாம்பத்தியத்தின் போது தமக்கு பிடித்தமான உடை உடுத்த கூற ஆண்கள் கூச்சப்படுவதுண்டு.
காரணம்: தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, அதில் உடையும் சில வகையிலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எல்லா வகையிலான உடையும் தாம்பத்திய உறவில் ஈடுபட ஏதுவாக அமையாது. மேலும், கணவனுக்கென்று தனிப்ட்ட விருப்பங்கள் இருக்கும். ஆயினும், அந்த விருப்பதை வெளிப்படுத்தி இந்த உடை உடுத்து என கூறுவதற்கு தயக்கம் காட்டுவார்கள். இதை மனைவியாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் சிலர் எண்ணுவதுண்டு.
விஷயம் #3 மனைவியாக தங்களுக்கு பிடித்தது என்னெவென்று கூற வேண்டும்.
காரணம்: தாம்பத்தியம் என்பது இருவர் மனமும் இணைந்த பிறகு ஈடுபட வேண்டியது மட்டுமல்ல. இருவருக்கும் எது பிடிக்கும், எது பிடிக்காது என அறிந்துக் கொள்ள வேண்டியதும் கூட. இதில் ஏற்படும் விருப்ப, வெறுப்புகள் காரணமாக இல்லற வாழ்க்கையில் பாதிப்படைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதிலும், முக்கியமாக செக்ஸ் விஷயத்தில் மனம் திறந்து பேசி தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.