Home ஆண்கள் விரயமாகி வரும் விந்தணுக்கள்!

விரயமாகி வரும் விந்தணுக்கள்!

44

captureகிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்திய ஆண்களிடம் சராசரியாக ஒரு மில்லிக்கு 60 மில்லியன் விந்து அணுக்கள் இருந்த காலம் போய், இப்போது கிட்டத்தட்ட 12 மில்லியன்தான் இருப்பதாகப் பயமுறுத்துகிறது டெல்லியில் இயங்கும் அகில இந்திய மருத்துவக் கழகக் குறிப்பு. எண்ணிக்கை மட்டுமல்ல, விந்து அணுக்களின் இயக்கம், அதன் உருவம் எல்லாம்கூடக் குறைந்தும் சிதைந்தும் வருவதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. என்ன காரணம்?

இது குறித்து நம்மிடம் பேசிய மருத்துவர்கள்,”பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்கிறது. கரு உருவதலில் ஆண், பெண் என இருவருக்கும் சமபங்கு இருக்கிறது. ஆண்களுக்கு விந்தணுவின் எண்ணிக்கையே பொறுத்து தான், அவர்கள் மலட்டுத்தன்மை உள்ளவரா அல்லது கரு உருவக்க கூடியவரா என்பதை தீர்மானிக்கிறது. ஆனால் மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் விந்தணு உற்பத்தி மற்றும் எண்ணிக்கை பாதிக்கப்படலாம். எனவே இத்தகைய விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்களும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களில் குறைவான விந்து எண்ணிக்கை மலட்டுத்தன்மை ஏற்படுவதில் முக்கியமான காரணம் ஆகும். ஆகவே விந்து எண்ணிக்கையை அதிகப்படுத்த எந்த உணவுகளை சேர்க்க வேண்டும், எந்த பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று ஒருசிலவற்றைத் தொகுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றினால், விந்தணுவின் எண்ணிகையை அதிகபடுத்தி, மலட்டுத்தன்மையை போக்கலாம்.

உடலில் போதிய ஜிங்க் சத்து இல்லாவிட்டால், விந்தணுவின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.
மேலும் இப்போது பெரும்பாலான ஆண்களுக்கும் இருக்கும் ஒரு பொதுவாக கெட்ட பழக்கங்களில் ஒன்று தான் சிகரெட் மற்றும் மது அருந்துதல். இத்தகைய செயலால் தற்காலிகமான சந்தோஷம் கிடைக்குமே தவிர, நாளடைவில் விந்தணுவின் எண்ணிக்கையில் குறைபாட்டை ஏற்படுத்திவிடும்.

அத்துடன் தொடர்ச்சியாக இறுக்கமான உள்ளாடையை அணிந்தால், மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் இன்றைய நவீன உலகில் பல்வேறு வகையான ஆரோக்கியமற்ற உணவுகள் தான் கடைகளில் கிடைக்கின்றன. இத்தகைய உணவுகளில் சுவை அதிகம் இருந்தாலும், இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்புக்கள் அதிகரித்து, உடல் எடை அதிகரித்துவிடும். பின் திருமணத்திற்கு பின் விந்தணு குறைபாட்டால் அவஸ்தைப்பட வேண்டியது தான்.

இதையெல்லாம் விட முக்கியமாக தற்போது நிறைய மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுகின்றனர். இவ்வாறு மன அழுத்தம் ஏற்பட்டால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதோடு, விந்தணுவின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.

இந்நிலையில் விந்தணு கோளாறுகள் கூட விந்தணு எண்ணிக்கை, விந்தணுவின் தரம் மற்றும் இயக்கத்தை பாதிக்கும். விந்தணு சரியாக வெளியேறாவிடில், அதன் இயக்கம் கட்டுப்பாடில்லாமல் தலைகீழாகிவிடும். சொல்லப்போனால் விந்தணு கோளாறுகள், விந்தணுவின் வடிவத்தை கூட மாற்றிவிடக் கூடும். அதிலும் விந்து வெளியேறாமல் இருத்தல், மலட்டுத்தன்மை, விறைக்காமல் இருத்தல் அல்லது சீக்கிரமாக விந்து வெளியேறுதல் கூட, தாம்பத்தியத்தின் போதும் கரு உருவாதலிலும் பிரச்சனைகளை உண்டாக்கும்.

ஒவ்வொரு விந்தணு வெளியேற்றத்தின் போதும் 1 முதல் 5 மி.லிட்டர் வரையில் மாறுபடுகின்றன. மேலும் விந்து எண்ணிக்கை ஒரு மி.மீ.க்கு 20-150 மில்லியன் வரையிலாக மாறுபடுகின்றன. அதில் 60 சதவிகித விந்தணுக்களாவது சரியான வடிவம் பெற்று, முன்னோக்கி ஊர்ந்து செல்லும் திறன் பெற்றிருக்கும்.

ஒவ்வொரு விந்தணு வெளியேற்றத்தின் போதும் 1 முதல் 5 மி.லிட்டர் வரையில் மாறுபடுகின்றன. மேலும் விந்து எண்ணிக்கை ஒரு மி.மீ.க்கு 20-150 மில்லியன் வரையிலாக மாறுபடுகின்றன. அதில் 60 சதவிகித விந்தணுக்களாவது சரியான வடிவம் பெற்று, முன்னோக்கி ஊர்ந்து செல்லும் திறன் பெற்றிருக்கும்.

வைட்டமின் பி நிறைந்துள்ள உணவுகளான பாலாடை கட்டி, முட்டை, பால், கெட்டி தயிர், தானியங்கள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது, விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும்.

ஜிங்க் உணவுகளான கடல் சிப்பிகள், எள் மற்றும் சூரியகாந்தி விதைகள், இஞ்சி, கோதுமை, இறைச்சி, டார்க் சாக்லேட், தர்பூசணி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வருவது, ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு வழிவகுக்கும்.

செலினியம் நிறைந்துள்ள உணவுகளான மட்டி (Shellfish), ஈரல், மீன், சூரியகாந்தி விதைகள், நண்டுகள், இறால்கள், கடல் நண்டுகள், அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்கள் விந்தணு குறைபாட்டைத் தடுக்கும்.

அடிக்கடி சுயஇன்பம் மற்றும் உடலுறவு மேற்கொள்ளுதலை தவிர்க்கவும்.

பாஸ்ட் புட், ஜங்க் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்கவும்.

மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் யோகா செய்யவும்.

தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்க வேண்டும்.

ஹார்மோன்களைச் சமப்படுத்த, தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையை சரியாக பராமரிக்க முடியும்.

அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்காராமல், அவ்வப்போது நடக்க வேண்டும்.

உடலில் இரத்த ஓட்டத்தை சரிப்படுத்த, உடலுக்கு வாரம் ஒருமுறை மசாஜ் செய்து கொள்ளவும்.

விந்தணு குறைபாட்டைத் தடுக்கும் கீழ்க்கூறிய யோகாசனங்களை தினமும் மேற்கொண்டு வந்தால், விந்தணு குறைபாட்டில் இருந்து விடைபெறலாம். – அக்னிசார் கிரியா (Agnisaar kriya) – ஹலாசனம் (Halasana) – சேதுபந்தாசனம் (Setubhandhasana) – தனுராசனம் (Dhanurasana) – அஷ்வாணி முத்திரை (Ashwani Mudra) – பஸ்ற்றிக பிராணயாமம் (Bhastrika Pranayam)” என்று தெரிவித்தனர்.