Home ஆண்கள் துரித விந்து வெளியேற்றம்-தீர்க்க 4 வழிகள்!

துரித விந்து வெளியேற்றம்-தீர்க்க 4 வழிகள்!

43

adorable-beach-bed-bedroom-favim-com-3217657-500x356உங்களுக்கு துரித விந்து வெளியேற்றம் (Premature Ejaculation) என்ற பிரச்சனை இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் முக்கால் வாசிப் பேர் அவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறதாக நினைத்துக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் அவர்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதில்லை. உங்களுக்கு துரித விந்து வெளியேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு எளிய வழி:
* முதலில் ஒரு நாற்பத்து எட்டு மணி நேரங்களுக்கு, சுய இன்பத்திலோ, உடலுறவிலோ ஈடுபடாதீர்கள்.

* ஒரு தனியறையில் கை முட்டி செய்யுங்கள். இதனை நீங்களே செய்யுங்கள், உங்கள் துணையை சேர்த்துக் கொள்ள வேண்டாம். முக்கியமாக ஒரு கைக் கடிகாரத்தை வைத்து எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

* நீங்கள் ஏழு நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், உங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை என்று அர்த்தம்.

தீர்வு வழிமுறைகள்:

இந்தப் பிரச்சனையை தீர்க்க, நான்கு வழி முறைகள் உள்ளன. இந்தப் பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, உங்களுக்கு ஏற்ற வழிமுறையை தேர்ந்தெடுக்க தயாராக இருப்பீர்கள்.

1) பயிற்சி:
இங்கே கொடுக்கப்பட்டுள்ள (see page துரித விந்து வெளியேற்றம்-தீர்க்க வழிகள்!) பயிற்சி மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படும் ஒரு பயிற்சியாகும். இது முற்றிலும் இலவசமான, சுலபமான தீர்வு. உங்கள் நேரத்தை தவிர வேறு எந்த செலவும் இருக்காது, ஏறத்தாழ 90% மக்கள் இந்த பயிற்சிக்கப்புறம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மருத்துவரை அணுகுங்கள்:

இந்தத் தீர்வும் மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக மேலே சொன்ன பயிற்சி எந்தப் பயனும் அளிக்கவில்லை என்றால், நீங்கள் மருத்துவரை அணுகி இந்த விஷயத்தை சொல்லுங்கள். பொது நோய் மருத்துவரை (General Practitioner) அணுகாமல், நீங்கள் காமப் பிரச்சனையில் பிரசித்தி பெற்ற மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்களைப் பரிசோதித்த பின்னர், உங்களுக்கு உளச் சோர்வு போக்கிகள் (antidepressants) களை சாப்பிடப் பரிந்துரைப்பார். குறிப்பாக செர்த்ராலைன் (Sertraline) மற்றும் பரக்ஸ்எடின் (Paroxetine) போன்ற மருந்துகள் தான் பரிந்துரைக்கப்படும்.

இப்போது புதிதாக இன்னொரு முறையும் பிரபலாமாகி வருகிறது. அதாவது வாஸோடைலேட்டர் (Vasodilator) என்கிற ஒரு புதிய மருந்தை ஊசி மூலம் ஆணுறுப்பில் செலுத்தி விடுவார் மருத்துவர். இந்த மருந்தை செலுத்திய பின், கிட்ட தட்ட 70% பேருக்கு முழு விறைப்பும், 12 நிமிடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்கும் திறனும் இருப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆனால் இது தமிழர் வாழும் பிரதேசங்களில் கிடைக்குமா என்று தெரியவில்லை.

மனோவசிய முறை:
பெரும்பாலான பேருக்கு துரித விந்து வெளியேற்றம் என்பது மனவியல் பிரச்சனை காரணமாகவே வருகிறது. அச்சம், தாழ்வு மனப்பான்மை, கவலை, தவிப்பு போன்ற உளவியல் பிரச்சனைகளே இதற்கு முக்கிய காரணம். நீங்கள் ஒரு தகுந்த மனவியல் மருத்துவரை அணுகினால், உங்களுக்கு மனோவசிய முறைப்படி இதற்கு தீர்வு காண முடியும்.

களிம்பு (கிரீம்கள்) தடவும் முறை:
இப்போதெல்லாம் புது விதமான பல களிம்பு, கிரீம் போன்றவை புழக்கத்தில் உள்ளன. இவற்றை உடலுறவிற்கு முன்னால், உங்கள் ஆணுறுப்பின் மேல் தடவிக் கொள்ள வேண்டும். இந்த கிரீம்கள் நான்கு வகைப்படும். அவை
*பென்சொகின் கிரீம் (Benzocaine cream)
*லைடோகின் கிரீம் (Lidocaine)
*மூலிகை கிரீம் (Herbal remedies)
*மென்தோல் கிரீம் (Menthol creams)

இந்த கிரீம்கள் புழக்கத்தில் இருந்தாலும், அவை எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை மருத்துவர் என்ற முறையில் ஊர்ஜிதப் படுத்த முடியவில்லை.