Home ஆண்கள் ஆண்மை பெருக ஆண்கள் தங்களது விந்தணுக்களை அதிகரிப்பது எப்படி?

ஆண்கள் தங்களது விந்தணுக்களை அதிகரிப்பது எப்படி?

69

ஆண்கள் தங்களது ஆரோக்கியம் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறித்து மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். நவீன காலகட்டத்தில் கண்ட உணவுகளை உட்கொண்டு பலரும் தங்களின் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து வைத்திருக்கின்றனர்.

மன அழுத்தம் அதிகம் ஏற்படும் இத்தகைய சூழ்நிலையில் விந்தணுக்கள் எளிதில் அழிக்கப்படுவதோடு அதன் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கச் சில எளிய வழிமுறைகளை இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

சில ஆய்வுகளில் அளவுக்கு அதிகமாகச் சுய இன்பம் காண்பது விந்தணுக்களின் கன அளவை பாதிப்பதாகக் கூறுகின்றன. உங்களுக்கு ஏற்கனவே விந்தணு குறைவாக இருப்பின், சுய இன்பம் காண்பதைக் குறைத்துக் கொண்டு, உடலின் ஆற்றலை அதிகரித்து, படுக்கையில் சிறப்பாகச் செயல்படுங்கள்.

புகை விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, அதன் இயக்கத்தையும் குறைத்து, குறைப்பிரசவம் நடைபெற வழிவகுக்கும். நல்ல கருவளத்துடன் இருக்க, புகை பிடிப்பதை உடனே கைவிட வேண்டும்.

விந்தணுக்களின் எண்ணிக்கையில் உடற்பயிற்சியும் முக்கியப் பங்கை வகிக்கிறது. ஆகவே விந்தணு ஆரோக்கியமாக இருக்கத் தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

உடல் வெப்பம் விந்தணுக்களின் கன அளவைப் பாதிக்கும். எனவே இறுக்கமான உள்ளாடை, சுடுநீர் குளியல் மற்றும் அந்தரங்க பகுதியை வெப்பமடையச் செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள். மேலும் நீண்ட நேர பைக் பயணம் மேற்கொள்வதையும் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அதுவும் விந்தணு உற்பத்தியைப் பாதிக்கும்.

ஆல்கஹால் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கும். இதனால் விந்தணு உற்பத்தியில் இடையூறு ஏற்படும். எனவே மதுவைத் தொடாதீர்கள்.

விந்தணுக்களின் எண்ணிக்கையைப் பராமரிப்பதில் தண்ணீர் முக்கியப் பங்கை வகிக்கிறது. ஆகவே தினமும் போதிய அளவில் தண்ணீரைப் பருகி வாருங்கள்.

மன அழுத்தம் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். மன அழுத்தத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடத் தியானம், உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவதோடு, உங்கள் மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள்.