தூங்கும் போது, நாம் எப்படி தூங்க வேண்டும் என்று கவலைப்படுவதே இல்லை. ஆனால் நிச்சயம் தூங்கும் சில விஷயங்களை மனதுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அது உடல் ஆரோக்கியத்துக்கு மிக அவசியமான ஒன்று.
ஆண்களின் அந்தரங்க இடத்தில் அடிபட்டால் மட்டும் தான் குழந்தை பாக்கியத்துக்கு ஆபத்து என்று எண்ண வேண்டாம். உள்ளாடையை இறுக்கமாக அணிவதும் கூட விந்தணு உற்பத்தியைக் குறைக்கும். அது குழந்தை பெற்றுக் கொள்ளும் திறனை குறைத்துவிடுகிறது.
இரவில் ஆண்கள் இறுக்கமான உள்ளாடை, பேண்ட் போன்றவற்றை அணியாமல், நிர்வாணமாகத் தூஞ்குவது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கச செய்யும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
500 ஆண்களைக் கொண்டு ஒரு வருடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த முடிவுகள் தெரிய வந்தது.
இரவில் நிர்வாணமாக உறங்கும் ஆண்களின் விந்தணுக்கள் வெளிப்படும் போது, மிக்க குறைந்த அளவு டிஎன்ஏக்கள் வீணாகின்றன.
நாள் முழுக்க இறுக்கமாக உள்ளாடையும் ஆடையும் அணியும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி திறன் குறைகிறது.
இறுக்கமான உள்ளாடைகளை அணிந்து தூங்குவதால், வெப்பம் அதிகமாக உற்பத்தியாவதால் டெஸ்ட்ரோஸ்டோன் உற்பத்தி குறைகிறது.