Home ஜல்சா “பி.எச்.டி படித்து விலைமாதுவான முதல் பெண் நான் தான்..” – நான் கடந்து வந்த பாதை...

“பி.எச்.டி படித்து விலைமாதுவான முதல் பெண் நான் தான்..” – நான் கடந்து வந்த பாதை #2

44

“11 மாத விலைமாது வாழ்க்கை, ஒரு வாடிக்கையாளர் அதிகப்படியான கோகைனை என் பெண்ணுறுப்பில் செலுத்தி போதை கொண்டான்….”

சில பொய்கள் சிரிக்க வைக்கும். சில சிரிப்புக்கு பின் போலியான வாழ்க்கை இருக்கும். போலியான சிரிப்பை ஏந்தி வாழ்க்கை நடந்தும் நபர்களை எடுத்துக் கொண்டால் இவர்கள் தான் முன்னின்றுக் கொண்டிருப்பார்கள். நாம் அறிந்த வரை அவர்கள் காசுக்காக உடலை விற்பவர்கள். ஆனால், அவர்கள் பின்னணியில் இருக்கும் சூழல்களை நாம் அறிய வாய்ப்புகள் இல்லை.

நான் கடந்து வந்த பாதையில் இன்று…. ஓர் உயர்ந்த பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிக்க சேர்ந்து, நடுவழியில் பாதை மாறி விபசாரத்தில் விழுந்து ஒரு அபலைப் பெண்ணின் துயரமான வாழ்க்கை.

மோசமான மனநலம்! “எனது மனநலம் மிகவும் மோசமானது. எப்படியாவது எனது டிகிரியை முடித்து விடவேண்டும் என்ற குறிக்கோள் கொண்டிருந்தேன். ஆனால், அது முடியாது என்றும் எனக்கு தெரியும். முடியாத என்ற நிலையில் மேற்படிப்பை பாதியில் விட்டு, நான் இளங்கலை பட்டம் பயின்ற லண்டனுக்கு மீண்டும் திரும்பினேன். அமெரிக்கவை விட லண்டனில் தங்குவதற்கும், ஒரு வேலை தேடுவதும் எளிதானதாக தோன்றியது எனக்கு.”

வேலை தேடவில்லை… “லண்டனில் இறங்கியதும் நான் வேலை தேடவில்லை. கொஞ்சம், கொஞ்சமாக போதைக்கு அடிமையானேன். நிறைய குடித்தேன், போதை… எனது சேமிப்புகள் மெல்ல, மெல்ல கரைந்தன. ஒருநாள் பணம் இல்லாத காரணத்தால் நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியே வீசப்பட்டேன். பிறகு அங்கிருந்து எனக்கு போதை பொருள் அளித்து வந்த டீலரின் இடத்திற்கு சென்றேன்.”

பாதை மாறியது! “அந்த டீலர் ஏதாவது போதை பொருள் வாங்க வந்தாயா? என கேட்டார், இல்லை என்பதே என்னிடம் இருந்த ஒரே பதில். பணம் இல்லை, தங்க இடம் இல்லை என்பதை விளக்கினேன். அந்த டீலர் உதவுவதாக கூறி ஆபாச விடுதிக்கு அனுப்பி வைத்தார். அங்கு நான் சந்தித்த ஒரு நபரின் சேர்க்கை தான் என்னை விபச்சாரத்தில் தள்ளியது.”

200 யூரோக்கள்! “மிகவும் பிரம்மாண்டமான இடம், வசதியான வாழ்க்கை, ஒரு நாள் இரவிற்கு 200 யூரோக்கள். ஏறத்தாழ இந்திய பணத்தின் மதிப்பில் ரூ.14,000. பெரிதாக அச்சம் ஏதுமின்றி எனது விபசார பயணம் இனிதே ஆரம்பித்தது. அந்நபர் என்னிடம் மிகவும் இனிமையாக தான் அண்டந்துக் கொள்வார். ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் குறைவு என்பதால் எனக்கு இது பணம் சம்பாதிக்கும் இடமாக மட்டுமே தெரிந்தது.”

ஆக்கிரோஷமாக மாறியது…. “வரிசையில் நிற்க வேண்டும். உடல் அமைப்பை வைத்து தான் தேர்ந்தெடுப்பார்கள். சிலர் அவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்தும் கூட. கொஞ்சம் கொடுமையானது தான். ஆனால், இது பழகிவிட்டது. சில இரவுகளில் போதுமான பணம் சம்பாதித்து ஓய்ந்துவிட்ட பிறகும் கூட வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். முடியாது என்பது அகராதியில் இல்லாத சொல். சொல்லக் கூடாத சொல்.”