குடும்பக்கட்டுப்பாடு ஒவ்வொரு தாம்பத்யத்தில் ஈடுபடுகிற நபரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய விடயம்.
எதிர்பாராத அனாவசியமான கர்ப்பம் உருவாகுவதை தடுக்கும் இந்த வழிமுறைகள் பற்றிய ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த கர்ப்பத்தடை முறையானது இயற்கையாக safe period எனப்படும் மாதவிடாய்க் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் மேற்கொள்ளப்படலாம்.
இதுபற்றி `உடலுறவுக்குப் பாதுகாப்பான காலம்` என்ற இடுகையில் பதிவிட்டிருந்தேன்.
இனி செயற்கையாக கர்ப்பத்தை தடுக்கும் வழிமுறைகள் பற்றி இந்த இடுகையில் பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.
செயற்கை முறைகளாவன ,
கொண்டம்(condom) எனப்படும் ஆணுறைகளை பாவித்தல்
முட்டை உருவாக்கத்தை உருவாக்கத்தை தடுக்கும் மருந்துகளை எடுத்தல் (ஊசி மூலம் அல்லது வாய் வழியாக)
கற்பைப் பைக்குள் intra uterine contraceptive device(IUD)எனப்படும் கருவியை செலுத்தி வைப்பதன் மூலம்
சத்திர சிகிச்சைகள் மூலம்
இந்த இடுகையிலே கர்ப்பப்பைக்குள் உட்செலுத்தப்படும் கருவிகள் பற்றி சிறு விளக்கம் அளிப்பதோடு ஏனைய முறைகள் பற்றி பின்பு பதிவிடுகிறேன்.
INRA UTERINE CONTRACEPTIVE DEVICE (IUD)
மேலே படத்தில் இருப்பவைதான் கர்ப்பப் பைக்குள் செலுத்தப்படும் இந்தக் கருவிகள்.
இவை எவ்வாறு செலுத்தப்படுகின்றன?
பெண்ணுறுப்பு வழியே எந்த மயக்க மருந்து இல்லாமல் சாதரணமாக ஒரு வைத்தியரினால் இவை உட்செலுத்தப்படலாம்.இதன் போது மிகவும் சிறிதளவான வழியே ஏற்படும்.
இவை எவ்வாறு கர்ப்பம் உருவாகுவதை தடுக்கின்றன?
இந்தக் கருவிகளிலே இரண்டு வகையானவை இருக்கின்றன .
ஒன்று வெறுமனே செப்பினால் ஆனவை (COPPER) இதிலே இருக்கும் செப்பு விந்தணுக்கள் முட்டையை சென்றடைவதை தடுக்கும் மேலும் குழந்தை கருப்பையின் உள்ளே இருப்பதற்கான சூழல் உருவாகுவதை தடுப்பதன் மூலமும் கர்ப்பம் உருவாகுவதை தடுக்கும்.
மற்றைய வகையான கருவியானது ஹார்மோன்களை(HORMONE) தன்னகத்தே கொண்டிருப்பதால் , அந்த ஹார்மோன்கள் பெண்ணில் முட்டை உருவாகுவதை தடுப்பதன் மூலம் கர்ப்பம் உருவாகுவதை தடுக்கின்றன. மாதவிடாயின் போது அதிகம் ரத்தம் வெளிவரும் பெண்கள் இந்த ஹார்மோன்கள் கொண்ட கருவியை பாவிப்பதன் மூலம் அதிகம் ரத்தம் வெளியேறுவதையும் தடுக்கலாம்.
எத்தனை காலத்துக்கு ஒருமுறை இவற்றை மாற்ற வேண்டும்?
செப்பினாலான கருவி என்றால் பத்துவருடங்கள் வரை நீடித்திருக்கும்.
ஹார்மோன்களை கொண்ட கருவி என்றால் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டி இருக்கும்.
இந்த கருவியினை வைத்துக் கொண்ட பெண் கர்ப்பம் தரிக்க விரும்பினால் வைத்தியரிடம் சென்று எந்த நேரமும் இதை வெளியே எடுத்துக் கொள்ளலாம்.
இது தானாக வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா?
ஆம்
குறிப்பாக மாதவிடாயின் போது இவை வெளியேறலாம்.
இந்தக் கருவி கர்ப்பப் பையினுள் செலுத்தப் பட பின்பு அதன் வாழ் பகுதியில் உள்ள சிறிய நூல் அந்தப் பெண்ணின் யோனித் துவாரத்தினுள்ளே இருக்கும். இதை அந்த பெண்ணால் இலகுவாக விரல் ஒன்றினால் அறிந்துகொள்ள முடியும்.
இந்தக் கருவியினை வைத்துக் கொண்ட பெண்கள் ஒவ்வொரு மாதவிடாயின் பின்பும் இந்த நூல் உள்ளதா என்று உறுதி செய்து கொள்வது நல்லது. அதே போல் ஒவ்வொரு தடவை உடலுறவு செய்யும் போதும் இதை உறுதி செய்து கொள்வது உகந்தது.