லீக்கோடெர்மா எனும் வெள்ளைத் தோல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடலெங்கும் தோலில் பல்வேறு இடங்களில் வெள்ளை நிறத் திட்டுகள் காணப்படும். தோலின் நிறத்தினை வழங்கும் செல்கள் இழக்கப்படுவதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
இது போன்ற வெள்ளைத் திட்டுகள் இருக்கும் இடத்தில் வேனிற் கட்டிகள் எளிதில் வர வாய்ப்புள்ளது, இதைத் தவிர்த்து இவற்றால் எந்தப் பிரச்சனையும் இல்லை. எனினும், இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இதனால் மிகுந்த மன அழுத்தமும் சங்கடமும் ஏற்படலாம்.
வெள்ளைத் தோல் பிரச்சனை உண்டாவதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.பல்வேறு காரணிகள் இந்தப் பிரச்சனைக்குக் காரணமாக இருக்கலாம். அவற்றில் சில: ஆட்டோஇம்மியூன் பிரச்சனைகள், மரபுவழிக் காரணிகள், சுற்றுச்சூழல் காரணிகள், நோய்த்தொற்றுகள், அடிபடுதல் போன்றவை.
வெள்ளைத் தோல் பிரச்சனையைச் சமாளிக்க உதவக்கூடிய சில பொருள்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.இவற்றை முழு உடலுக்கும் பயன்படுத்தும் முன்பு, சிறு பகுதியில் மட்டும் சோதனைக்காகப் பயன்படுத்திப் பார்ப்பது நல்லது. இதனை பேட்ச் டெஸ்ட் என்பர். உங்களுக்கு அப்பொருள்களால் ஏதேனும் ஒவ்வாமை அல்லது நோய்த்தொற்று ஏற்படுகிறதா என்றறிய இது உதவும்.
சில பொதுவான குறிப்புகள் (Some common tips you can use include)
கார்போகரிசி மற்றும் புளியங்கொட்டை: கார்போகரிசி மற்றும் புளியங்கொட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, 2-3 நாட்கள் நீரில் ஊறவைக்கவும். பிறகு அவற்றை அரைத்து பசை போல் செய்துகொண்டு வெள்ளைத் திட்டுகள் மீது பூசவும்.கார்போகரிசி சீன பாரம்பரிய மருத்துவத்திலும் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் தோல் பிரச்சனைகளைத் தீர்க்கும் சிகிச்சைகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதைப் பயன்படுத்துவதால் அரிப்பு, தோல் சிவத்தல் அல்லது ஏதேனும் திரவம் வெளிவருதல் போன்றவை ஏற்பட்டால் பயன்படுத்துவதை நிறுத்திவிடவும்.
சிவப்புக் களிமண்: சிவப்புக் களிமண்ணையும் இஞ்சிச்சாற்றையும் சம அளவில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவந்தால் தோல் நிறத்தை மீட்பதில் உதவியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
துளசி இலைகள் மற்றும் எலுமிச்சைச் சாறு: துளசி இலைகளை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாற்றைக் கலந்து பூசுவது, தோல் மீண்டும் பழைய நிறத்தை அடைய உதவக்கூடும்.நாளொன்றுக்கு மூன்று முறை இதனைப் பயன்படுத்தியவர்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
முள்ளங்கி விதைகள்: 30 முள்ளங்கி விதைகளை அரைத்து அதில் இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்து பசை போல் செய்துகொள்ளவும். இந்தப் பசையை வெள்ளைத் தோல் இருக்கும் பகுதிகளில் பூசிவந்தால் நிறம் மாற உதவக்கூடும்.
இஞ்சி இலை பற்று போடுதல்: வெள்ளைத் தோல் இருக்கும் பகுதிகளில், இஞ்சி இலைகளை வைத்து பற்று போடுவது சிலருக்கு நல்ல பலன்களை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
உங்கள் தோலில் வெள்ளைப் பகுதிகள் இருப்பதைக் கண்டறிந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.