வாயுத்தொல்லையால் அவதிப்படுவோருக்கு அருமருந்து கீழே காணலாம்.
தேவையான பொருட்கள்:
1.சுக்கு – 50 கிராம்
2.மிளகு – 50 கிராம்
3.திப்பிலி – 50 கிராம்
4.இந்துப்பு – 50 கிராம்
5.சீரகம் – 50 கிராம்
6.கருஞ்சீரகம் – 50 கிராம்
7.கடுக்காய் – 50 கிராம்
8.பெருங்காயம் – 50 கிராம்
9.சாதிக்காய் – 50 கிராம்
செயல்முறை:
மேற்கண்ட அனைத்தையும் முறைப்படி சுத்தம் செய்ய வேண்டும்.
பின்னர், தனித்தனியாக இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து, பொடி செய்த அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிடும் முறை:
ஒரு சிட்டிகை அளவு எடுத்து, தேன் அல்லது மோர் அல்லது வெந்நீரில் கலந்து காலை, இரவு ஆகிய இரண்டு நேரங்களில் சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள் :
வாயு தொல்லை
விலா எலும்பு வலி
இடுப்பிலிருந்து மார்பு வரை வேதனை தரும் வாயு தொல்லை
மூச்சை அழுத்தி பிடிக்கும் நெஞ்சு வலி.