Home ஜல்சா ஆண்மை குறைவை போக்கும் மாத்திரை செய்த சாதனை ?

ஆண்மை குறைவை போக்கும் மாத்திரை செய்த சாதனை ?

98

ஆண்மைக்குறைவை நிவர்த்தி செய்யும் ‘வயாகரா’ என்ற மாத்திரை தற்போது உலகம் முழுவதும் கோடிக் கணக்கில் விற்பனையாகி சாதனை படைத்து வருகின்றது.

1990 ஆம் ஆண்டுகளில் இம்மாத்திரை பிஷன் குழுவினரால் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு தயாரானது. ஆரம்பத்தில் மார்பு தொற்றுநோய்க்காக கண்டு பிடிக்கப்பட்ட இந்த மாத்திரைக்கு சில் டெனால்பில் என பெயரிடப்பட்டது.

மார்பு தொற்று காரணமாக ஏற்படும் தொண்டை வலிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த மாத்திரைகள் எதிர்பாராதவிதமாக ஆண்களுக்கு பாலியல் தூண்டலை அதிகரித்து பக்க விளைவை ஏற்படுத்தியது.

இதன்மூலம் பல ஆண்களின் பாலியல் உறவு மேம்பட்டது. அதைத் தொடர்ந்து 40 வயதுக்கு மேல் ஆண்மைக் குறைவு ஏற்படும் ஆண்களின் குறையை போக்கும் வகையில் இந்த மாத்திரை மாற்றியமைக்கப்பட்டு நீல நிறத்தில் மாற்றப்பட்டு ‘வயாகரா’ என பெயரிடப்பட்டது.

விற்பனை தொடங்கிய ஒரு வாரத்தில் அமெரிக்காவில் மட்டும் 1,50,000 பேர் பயன்படுத்தினர். அதனை தொடர்ந்து வெளிநாடுகளில் விற்பனையை தொடங்கியது.

கடந்த 20 ஆண்டுகளாக பல கோடி மாத்திரைகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. இந்த மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.650 கோடி வருமானம் ஈட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.