வாயு தொல்லையால் ஒருவர் அவதிப்படுகிறார் என்றால், அவரைச் சுற்றியுள்ளவர்கள் அதைவிட மோசமாகவே அவதிப்படுவார்கள். சத்தமே இல்லாமல் இவர்கள் காற்றை பிரித்துவிடும் போது மூக்கை பொத்திக்கொண்டு சில நிமிடங்கள் மூச்சுத்திணறலை சமாளிக்க வேண்டிய நிலை அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படும்.
வாயுத்தொல்லை என்பது வெறும் வாயு பிரிதல் மட்டுமின்றி, அஜீரணம், அடிக்கடி ஏப்பம் விடுதல், வயிற்று இரைச்சல், வயிறு உப்பிசம் உள்ளிட்ட அறிகுறிகளைக் கொண்ட ஒரு தொல்லையாகும். இதற்கு நாம் சாப்பிடும் உணவு முக்கிய காரணமாகும்.
வேக வேகமாக நாம் சாப்பிடும் போது நம்மை அறியாமல் காற்றையும் சேர்த்து உறிஞ்சி விடுகிறோம். இந்த காற்று இரைப்பையில் ஏப்பமாக வெளிவருகிறது.ஆனால் மீதி குடல் வழியாக சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது. நான் ஒன்றுக்கு 15 முறை வெளியேறினால் எந்த பிரச்னையும் இல்லை. அதற்கு மேல் என்றால் உடலில் பிரச்னை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக வெளியேறும் வாயு கெட்ட வாடை கொணடதாக வெளியேறினால் நமது வயிறு பிரச்னைக்குள்ளாகியிருக்கிறது என்று அர்த்தம். எனவே உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நலம்.
உடல் எடை அதிகம் உள்ளவர்கள், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், தண்ணீர் குறைவாக அருந்துபவர்கள் இவர்களுக்கு வாயு தொல்லை வரும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
வாயுத்தொல்லையில் இருந்து தப்பிக்க மொச்சை, பட்டாணி, பருப்பு, வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், சாக்லேட், கேக், பிஸ்கட், இறைச்சி, முட்டை, பால், அல்வா, பால்கோவா, சீஸ், பொறித்த உணவுகள் ஆகியவற்றை முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது.
இட்லி, இடியாப்பம் போன்றஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிடுங்கள். தினசரி நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். பான்மசாலா உண்பது, வெற்றி பாக்கு உண்பது உள்ளிட்டவற்றை நிறுத்துங்கள். மது, புகைப்பழக்கத்தை கைவிடுங்கள். இவற்றை செய்தால் வாயு தொல்லைக்கு கேட்டுப்போடலாம்.