ஜல்சா செய்திகள்:கவிப்பேரரசு என்று நம்பிக்கொண்டிருந்த வைரமுத்து மீதான பாலியல் புகார்களை தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பாடகி சின்மயி. சின்மயி கூறியிருப்பதாவது,
கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தக வெளியீடு வைத்திருந்தார் வைரமுத்து. அந்த விழாவுக்கு வந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.
என்னால் முடியாது என்று சொன்னதும், ‘விழாவுக்கு வரப்போகும் அரசியல்வாதியைப் பற்றி நீ தவறாக மேடையில் பேசினாய் என்று நான் சொல்லுவேன்’ என மிரட்டி திட்டிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.
இதனால் நான் கதறி அழுவதைப் பார்த்த என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆறுதல் சொல்லி தைரியமும் கொடுத்தார்கள். அதன் பிறகு, வைரமுத்துவின் மேனேஜரை அழைத்து ‘அவர் சொன்ன அதே அரசியல்வாதியிடம் நான் அவரைப் பற்றி பேசியதாகச் சொல்லப்படுவது அத்தனையும் பொய்.
ஏனென்றால், இதுவரை நான் எந்த மேடையிலும் பேசியதில்லை எனச் சொல்வேன். அதை அவர் கண்டிப்பாக நம்புவார் எனக் கூறினேன். இப்படி வைரமுத்து எங்கே, எப்படி தன்னைப் பாலியல் மிரட்டலுக்கு ஆளாக்கினார் என்பதை ட்விட்டரில் தொடர் ட்வீட்டுகளாக வெளியிட்டு வருகிறார்.
வைரமுத்துவின் வீட்டுக்குப் பாராட்டுவதற்காகவும், தொழில் நிமித்தமாகவும் அழைக்கப்படும் பெண்கள் கதவு தாளிடப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதையும், அவர்களைப் பாராட்டுவது போல செய்யப்பட்ட அத்துமீறல்களையும் சின்மயிக்கு ட்விட்டரில் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் பெண்கள் விடுதியில் அவர் அந்தப்பெண்களின் அனுமதியின்றி அவர்கள் அறையில் நுழைந்து தவறான விதத்தில் பேசியது குறித்தும், தவறாக நடந்துகொண்டது குறித்து சின்மயிக்கு தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.