பொது மருத்துவம்:மூலிகைகளின் ராணி என்றழைக்கப்படும் துளசி சளி, காய்ச்சல், ஆஸ்துமா என பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.
மனிதர்களுக்கு எண்ணற்ற பயன்களை வழங்கக்கூடியது துளசியை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவிகளை பற்றி பார்க்கலாம்.
துளசியின் பக்க விளைவுகள்
கல்லீரலில் பாதிப்பு
அசெட்டமினோஃபென் மற்றும் துளசி இரண்டுமே உடலின் வலி நிவாரணிகளாக உள்ளதால் அசெட்டமினோஃபென் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் தொடர்ந்து துளசியை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
எனவே இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்வதினால் கல்லீரலின் செயல்பாடுகளை அதிக அளவு பாதிப்பதால் இதை முற்றிலுல் தவிர்ப்பது மிகவும் நல்லது.
கர்ப்பிணி பெண்களின் கருப்பையில் பாதிப்பு
கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக துளசி எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் துளசி தினமும் உட்கொள்வதால் கருப்பையை சுருக்கி பிரசவ காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
மேலும் துளசி தாயின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். சிலசமயம் கருச்சிதைவு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி மாதவிடாயிலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
இரத்தத்தை மெல்லியதாக்கும்
இரத்தத்தை மென்மையாக்க ஏற்கனவே மருந்து சாப்பிடுபவர்கள் துளசியை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் துளசியில் உள்ள மூலிகை இரத்தத்தை மெல்லியதாக்குகிறது. எனவே இவை இரண்டையும் உட்கொள்வது அனைவருக்கும் பொருந்தாது.
ஆண்களின் விந்தணுக்களை குறைக்கும்
தினமும் ஆண்கள் துளசி சாப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். ஏனெனில் அதிகளவு துளசி சாப்பிடுவதால் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை குறைத்து கருவுறுதல் தன்மையை குறைக்கிறது என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
சர்க்கரையின் அளவை குறைக்கும்
சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக துளசியை சாப்பிடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இதை சாப்பிடுவதால் உடலில் சர்க்கரை அளவு திடீரென அதிகம் குறைவது திடீர் மயக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மேலும் சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களும், சர்க்கரை அளவை குறைக்க மருந்து எடுத்துக்கொள்பவர்களும் இதனை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் மருந்தில் உள்ள சத்தும் துளசியில் உள்ள சத்தும் ஒன்று என்பதால் இது மாத்திரைகளின் மீது வினைபுரிவதால் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.
அறுவைசிகிச்சைக்கு பின் சாப்பிடக்கூடாது
துளசி இரத்தத்தை மெல்லியதாக்கும் பண்பு இருப்பதால் இது இரத்தத்தை ஒன்றிணைய அனுமதிக்காது. எனவே சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் துளசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதிகளவு யூஜெனோல்
துளசியில் கல்லீரலை பாதிக்கக்கூடிய யூஜெனோல் அதிக அளவு உள்ளது. மேலும் யூஜெனோல் ஒரு ஹெபடோடாக்சிக் ஆகும், எனவே இதனை அதிகளவு உடலில் சேர்த்து கொள்வது ஆரோக்கியமானதல்ல.
மேலும் சுவாசக்கோளாறுகள், இருமலின் போது இரத்தம், சிறுநீரில் இரத்தம், தொண்டை மற்றும் வாயில் புண் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது
புற்றுநோய்
துளசியில் உள்ள முக்கியமான ஒரு பொருள் எஸ்ட்ராகல். தினமும் அதிகளவு துளசியை சாப்பிடுவதால் அதில் உள்ள எஸ்ட்ராகல் அளவு அதிகரித்து உடலில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே துளசியை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் அசெட்டமினோஃபெனுக்கு மருந்துகளை எடுத்துக் கொள்வபர்கள் துளசியை சாப்பிடுவதை தவிர்க்கவும்.