Home ஆரோக்கியம் தூங்கத்திலேயே சிறுநீர் போகிறதா?… அதை எப்படி தடுக்கலாம்?…

தூங்கத்திலேயே சிறுநீர் போகிறதா?… அதை எப்படி தடுக்கலாம்?…

30

நேரங்கெட்ட நேரத்தில் ரெஸ்ட்ரூம் போக வேண்டுமென்றாலும் இம்சை. சாதாரணமாக நமக்கு பகலில் சிறுநீர் பலமுறை போகும்; இரவில் அவ்வளவாக போகாது. வீட்டுக்காரருக்குக் கட்டுப்படும் வளர்ப்புப் பிராணி மாதிரி, நாம் உறங்கி எழும் வரை சிறுநீர் நமக்குக் கட்டுப்பட்டுக் காத்திருக்கும்.

ஆனால், சிலருக்கு மட்டும் இந்தக் கட்டுப்பாடு தளர்ந்து விடும். இதனால், தன்னிச்சையாகச் சிறுநீர் பிரிந்துவிடும். இது பகல், இரவு இரண்டு வேளைகளிலும் ஏற்படுவது ஒரு வகை.

எதுவும் அளவோடு இருந்தால் ஆபத்தில்லை. நேரத்தோடு நடந்தால் பாதிப்பில்லை. சிறுநீரை அடக்கினாலும் கஷ்டம்; அவசரமாக வந்தாலும் அவதி

இரவில் மட்டும் ஏற்படுவது இன்னொரு வகை. இரண்டாவதாகச் சொல்லப்பட்டது, பிரதானமாகக் குழந்தைகளின் பிரச்னை. இவர்கள் உறக்கத்தில் படுக்கையை நனைத்துவிடுவார்கள்.

இந்தப் பாதிப்பின் பெயர் ‘நாக்டெர்னல் எனுரெசிஸ்’ (Nocturnal Enuresis). இன்றைய வாழ்க்கைச் சூழலில் இந்தப் பாதிப்பு குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது. இது பெண்களைவிட ஆண் குழந்தைகளுக்குத்தான் அதிகம் ஏற்படுகிறது.

சிறுநீர்க் கழிப்பை நாம்தான் கட்டுப்படுத்துகிறோம்’ என்று காலரைத் தூக்கிக்கொள்கிறோம். உடலில் மூளை – நரம்பு மண்டலம் என்ற ‘நெட் – ஒர்க்’ மட்டும் வேலை செய்யாவிட்டால், நமக்குப் பகலென்ன, இரவென்ன, எல்லா நேரமும் ‘உச்சா’ போய் உள்ளாடை நனைந்துவிடும்.

சிறுநீரகத்திலிருந்து சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் வந்து சிறுநீர்ப்பை நிரம்பியதும், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை மூளை நமக்குத் தெரிவிக்கிறது. அதற்கு நாம் தயாராகவில்லை என்றால், சிறுநீர்ப்பையின் அடியிலிருக்கும் ‘வால்வுகளுக்கு’ (Sphincters) ‘அடுத்த கட்டளை வரும்வரை ‘வாய்’ திறக்க வேண்டாம்’ என்று மூளை ‘144 தடை உத்தரவை’ நரம்புகள் மூலம் அனுப்பி வைக்கிறது.

எப்போது நாம் சிறுநீர் கழிக்கத் தயாராகிறோமோ, அப்போது தடை உத்தரவை மூளை ‘வாபஸ்’ வாங்கிக் கொள்ள, வால்வுகள் திறக்கின்றன. சிறுநீர் ரிலீஸாகிறது. சிறுநீர்ப்பை அளவுக்கு மீறி நிரம்பி விட்டாலும், மூளை அந்தத் தடை உத்தரவை உடனே வாபஸ் பெற்றுக்கொள்ளும்.

அப்போது நம்மால் சிறுநீர்க் கழிப்பைக் கட்டுப்படுத்த முடியாது. இப்படிச் சிறுநீர் கழிக்க சிறுநீர்ப்பை மட்டும் ஒத்துழைத்தால் போதாது; வயிற்றுத் தசைகளும் இடுப்புத் தசைகளும் ஒருங்கிணைந்து அழுத்தம் தர வேண்டும்.

அப்போதுதான் சிறுநீர்ப்பை முழுவதுமாகக் காலியாகும். பொதுவாகவே, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சிறுநீர் கழிக்கும் உணர்வைக் கட்டுப்படுத்தும் சக்தி குறைவாக இருக்கும். இதனால் அவர்கள் படுக்கையை நனைப்பார்கள். அவர்களை நினைத்துப் பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை; சிகிச்சையும் அவசியமில்லை. பிரச்னை தானாகவே சரியாகிவிடும். ஐந்து வயதுக்கு மேல் அது தொடர்ந்தால், உடனே கவனிக்க வேண்டும்.

இவற்றில் நார்ச்சத்து ரொம்பவே குறைவு. இதனால் அவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறது. குடலில் இறுகிய மலம் சிறுநீர்ப்பையை அழுத்தி, படுக்கையை நனைக்க வைக்கிறது. சிறுநீர்ப் பை சரியாக வளர்ச்சி பெறவில்லை என்றாலும் இதே நிலைமைதான்.

குழந்தைப் பருவத்தில் பெற்றோருக்கு இந்தப் பிரச்சினை இருந்திருந்தால், அவர்களின் வாரிசுகளுக்கும் இது ஏற்படலாம். சிறுநீர்க் கழிப்பைக் கட்டுப்படுத்துவதில் ADH ஹார்மோனுக்கும் பங்கு உண்டு. சில குழந்தைகளுக்கு இரவில் இது கொஞ்சமாகச் சுரக்கும்.

அதனால் அவர்களுக்கு சிறுநீர்க் கட்டுப்பாடு குறைந்து படுக்கையை நனைப்பார்கள். இப்படிப் பல காரணங்களால் ஏழு வயது வரை இந்தப் பிரச்சினை தொடர்வதை ‘பிரைமரி எனுரெசிஸ்’ (Primary enuresis) என்கிறோம்.

இது தானாகவோ, சிகிச்சையாலோ சரியாகிவிட்ட குழந்தைகள், சில வருடங்களில் திடீரென்று மீண்டும் படுக்கையை நனைக்க ஆரம்பிப்பார்கள். இதை ‘செகண்டரி எனுரெசிஸ்’ (Secondary enuresis) என்கிறோம். இதற்கு மனம் சார்ந்த பிரச்சினைதான் அடிப்படைக் காரணமாக இருக்கும்.