சிறுநீர் கசிவதைப் பற்றி கேள்வியுற்றதுண்டா? எம்மை அறியாமலேயே சிறுநீர் சிறிது சிறிதாக கசிவதுதான் இந்த சிறுநீர் கசிவு நோய். இதனால் பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
வெளியே செல்லவும் முடியாமல் வீட்டினுள்ளும் நிம்மதியாக ஒரு வேலையைச் செய்ய முடியாமல் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவதியுறுகின்றனர்.
இந்த சிறுநீர் கசிவு ஏன் ஏற்படுகின்றதென்று உங்களுக்குத் தெரியுமா?
இருமல், தும்மல், உடற்பயிற்சி, ஓடுதல், இவற்றின் பொழுது பலவீனமடைந்த இடுப்பு தசைகளால் சிறுநீர் கசிவு ஏற்படலாம். அதிக எடையுள்ள பெண்கள், நரம்பு பாதிப்புடையோர், சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிலை ஏற்படலாம். அதிக கேபின், சில வகை மருந்துகள் இந்த பாதிப்பினை மேலும் அதிகரிக்கச் செய்யலாம்.
இதிலிருந்து விடுபட நாம் என்ன செய்யலாம்?
01. மருத்துவ உதவியும், பயிற்சி முறைகளுமே இந்த பாதிப்பிற்கு சிறந்த முன்னேற்றத்தினை அளிக்கும்.
02. தேவையான அளவு நீரை மாத்திரம் உட்கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
03. கசிவுகளுக்காக சில பாதுகாப்பு முறைகளை அறிந்து வெளியில் செல்லும் பொழுது அதனை பின்பற்றலாம்.
04. தொடைகளில் புண், அரிப்பு, அலர்ஜி இல்லாது கவனம் செலுத்த வேண்டும்.
05. உடற்பயிற்சி செய்யுங்கள். சுறுசுறுப்பாக இருக்கும் பெண்ணிற்கு இப் பாதிப்புகள் அதிகம் ஏற்படாது.
06. இத்தகைய பாதிப்புகளின் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவ ஆலோசனை பெற்றே இதனை சரி செய்ய முடியும்.
07. நல்ல ஆழ்ந்த தூக்கம் தேவை. 8 மணிநேர தொந்தர வுஇல்லா தூக்கம் அவசியம். இது குறையும் பொழுது வளர்ச்சி ஹோர்மோன் அளவும் குறையும்.