நம் வாழ்க்கையில் பல நிலைகளை கடந்து வந்தால் தான் வெற்றி எனும் கோட்டை எட்ட முடியும். இது இல்லறம், வேலை சூழல் என அனைத்திற்கும் பொருந்தும். முக்கியமாக இன்றைய உறவுகளுக்கு மத்தியில் மூச்சுக்கு 300 தடவை காதலிக்கிறேன் என்று சொல்லிக் கொள்கின்றனரே தவிர, காதலை வெளிப்படுத்த தவரிவிடுகிறார்கள்.
இன்று பெரும்பாலும், காதல் உணர்வுகளும், முத்தங்களும், உணர்சிகளும் ஸ்மைலி, எமொஜி எனும் பொம்மையாக மாறிவிட்டன. இன்று யாரும் உணர்வுகளை முழுவதுமாக 100 சதவீதம் பரிமாறிக்கொள்வதில்லை. இதன் காரணமாக தான் பாதி வழியிலேயே பயணத்தை முடித்தும், முறித்தும் கொள்கின்றனர்.
உறவில் சில சமயம் கடினமாக நிலைகளை கடந்து வர வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். அதை நீங்கள் தான் தாண்டி வர வேண்டுமே தவிர, வழியை மாற்றிக் கொண்டு வேறு பாதையை தேடி சென்றுவிட கூடாது…
தொடர்பு நேர்மையான காதலராக, மிகவும் நல்லவராக தான் இருப்பார். ஆனால், ஏதோ ஓர் காரணத்தினால் வேறு நபர் மீது ஈர்ப்புக் கொள்ள ஆரம்பதிருப்பார். வெறுமென நான் காதலிக்கிறேன் என கூறுவது மட்டும் போதாது. உங்களுக்கே தெரியாமல் உறவில் ஏற்படும் தொய்வு காதலை சிதைத்துவிடும். அன்பும், அக்கறையும் வார்த்தையை காட்டிலும், உணர்வில் வெளிப்படுத்துங்கள்.
பொறாமை உறவை கொல்லும் கொடிய கருவி இந்த பொறாமை. உங்கள் நண்பர் உயரும் போதோ, உங்கள் காதலி / துணை அடுத்த நிலைக்கு செல்லும் போதோ பொறாமைப் படுகிறீர்கள் எனில், நீங்கள் அந்த உறவில் பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.
உடலுறவு மனதை காட்டிலும் உடல் ரீதியாக மட்டும் நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பிறத்தல். இது போன்ற தருணங்கள் உண்டாவதற்கு காரணம் காதல் வெறும் வார்த்தையாக உறவில் நீடிப்பது தான். காதலின் பற்றாக்குறை தான் இது போன்ற சூழல் அதிகரிக்க காரணியாக இருக்கிறது.
முயற்சிகள் சிறிய பிரச்சனையை காரணம் காட்டி எல்லாம் முடிந்துவிட்டது இனிமேல் இருவரும் சேர முடியாது என்ற எண்ணம் பிறப்பது, எப்போது நீங்கள் உங்கள் உறவில் இனி முயற்சிகள் வேலைக்கு ஆகாது என்று நினைக்கிறீர்களோ. அன்று காதலை மீட்டெடுக்க நினைத்து பாருங்கள் முயற்சிகள் உங்கள் முன்னே வரிசையாக வந்து நிற்கும், உறவும் சிறக்கும்.
நிலை மாற்றம் இனி இவள் வேண்டாம், வேறு நபரை பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம். இன்றைய போக்கில் பெரும்பாலும் இந்த எண்ணம் எளிதாக பிறந்து விடுகிறது. உங்கள் குணாதிசயங்களை மேம்படுத்தி அல்லது மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர உறவை அல்ல. இப்படியே சென்றால் நிலையற்ற உறவுங்கள் மட்டுமே உங்கள் நிலையாகி போகும்.
விடுதலை காதல் என்பது அஞ்சறைப் பெட்டியைப் போன்றது. அதில் அனைத்து சுவைகளும் நிரம்பி இருக்கும். ஏதோ ஒன்று பிடிக்கவில்லை என்பதற்காக ஒட்டுமொத்தமாக அதை தூக்கி எறிவது தவறு.
விடுதலை சூழ்நிலைகள் என்றும் இன்பத்தை மட்டுமே தராது. துன்பம் நேரிடுகிறது என்பதற்காக தற்கொலை செய்துக் கொள்வது முட்டாள்தனமான செயல். எனவே, உறவை மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டுமே தவிர அதை குழித் தோண்டி புதைத்துவிட கூடாது.
தாம்பத்தியம் மன அழுத்தத்தை போக்கும் அருமருந்து உடலுறவு என ஆய்வாளர்களே கூறுகின்றனர். எக்காரணம் கொண்டும் உங்கள் இல்லற வாழ்க்கையில் தாம்பத்திய வாழ்க்கைக்கு தடை விதிக்க வேண்டாம். சிலர் சண்டை, சச்சரவு காரணமாக உடலுறவில் ஈடுபடாமல் இருப்பர்கள். இது மேலும், கோபத்தை அதிகரிக்க செய்யும் செயல்.
தாம்பத்தியம் சற்று விட்டுக் கொடுத்து, கோபம் சற்று தணியும் போது தாம்பத்யத்தில் ஈடுபடுவது உங்கள் உறவு சிறக்கவும், கசப்பான தருணங்களை மறக்கவும் உதவுகிறது. காதல் என்பது மூச்சுக்கு 300 தடவை காதலிக்கிறேன் என்று சொல்வதில்லை. ஓர் நாளில் ஒரு முறையாவது உண்மையாக காதலை வெளிப்படுத்துவதே ஆகும்.