Home சமையல் குறிப்புகள் தாபா ஸ்டைல்: பஞ்சாபி முட்டை குழம்பு

தாபா ஸ்டைல்: பஞ்சாபி முட்டை குழம்பு

50

பஞ்சாபி ஸ்டைல் முட்டை குழம்பில் வெங்காயம், தக்காளி கிரேவி சேர்த்து சமைக்கப்படுகிறது. இதை ரொட்டி, நாண், சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

வேகவைத்த முட்டை – 4
வெங்காயம் – 1 1/2 கப்
தக்காளி – 1 கப்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
இலவங்கப்பட்டை – 1
பச்சை ஏலக்காய் – 2
கிராம்பு – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா- 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 3 சிட்டிகை
உப்பு – சுவைக்கேற்ப
வெந்தய தழை – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – 1 டீஸ்பூன் ( நறுக்கியது)

செய்முறை

சிறிய வெங்காயம், தக்காளியை தனித்தனியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

வேக வைத்த முட்டையின் ஓட்டை எடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு முட்டையை பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் இலவங்கப்பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, சேர்த்து தாளித்து நறுக்கிய அரைத்த வெங்காய விழுதைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகுமாறு வதக்கவும். தக்காளிச் சாற்றை ஊற்றி கெட்டியாகுமாறு கிளறி வேக விட்டு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மசாலா வாசம் மூக்கை துளைக்கும் வரை வேக வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

உப்பை சரிபார்த்துக் கொள்ளவும்.

குழம்பு கெட்டியாக வந்ததும் வேக வைத்த முட்டையைப் போட்டு , வெந்தய தழை இட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் கடாயை மூடி வேக வைக்கவும்.

அதன் மேலாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி விட்டு பரிமாறவும்.

பஞ்சாபி ஸ்டைல் முட்டை குழம்பு ரெடி!